நீங்கள் அறிய வேண்டிய ஜன்னத்துல் பகீவு
சூஃபிகளின் ஹஜ்: - 65
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நீங்கள் அறிய வேண்டிய
ஜன்னத்துல் பகீவு :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"முழுமதி நிலவைப் போன்ற அழகியத் தோற்றத்தில் எழுபது ஆயிரம் பேர் பகீவுவிலிருந்து எழுப்பப்படுவார்கள்.
அவர்கள் கேள்வி கணக்கு இல்லாமல் சொர்க்கம் செல்லுவார்கள்."
நூல்: அபூதாவூத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"யார் எங்கள் அடக்கத்தலமான பகீவுவில் அடக்கம் செய்யப்படுகிறாறோ அவர் நம் சாட்சிக்கும், ஷஃபாஅத்துக்கும் உரியவராவார்"
நூல்: திர்மிதீ, தாரீகுல் மதீனா,
தஹிதீபு வத்தஹிதீப்
தாவூத் பின் காலித் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ அல்லது உம்ராவிற்காகவோ சென்றிருந்தார்.
அவருடன் இப்னு ரஃசுல் ஜாலூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இருந்தார்கள்.
(இருவரும்) ஜன்னத்துல் பகீவு இருக்கும் வழியாக மதீனாவினுள் நுழைந்தார்கள். அவர்கள் அந்த கப்ருகளின் (ஓரமாக) நடந்துச் செல்லும் போது "நிச்சயமாக அதுதான் இது" என இப்னு ரஃசுல் ஜாலூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள்.
உடனே முஸ்அப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “என்ன அதுதான் இது" என கேட்டார்கள்.
அவர் “நிச்சயமாக நாங்கள் எங்கள் இறை வேதத் (தவ்ராத்)தில் ஓர் அடக்கத் தலத்தைப் பற்றி வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அதன் கிழக்குப் புறத்தில் பேரீத்தம் மரங்களும், அதன் மேற்குப் புறத்தில் குடியிருப்புகளும் இருக்கும் (என வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
அது இதுதான் என கூறி விட்டு (அவர் தொடர்ந்து) அதிலிருந்து எழுபதாயிரம் பேர் எழுப்பப்படுவார்கள். அவர்கள் அனைவரும் பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பது போல் அழகிய தோற்றத்தில் காணப்படுவார்கள்.
அப்பொழுது பூமியிலுள்ள மற்ற அடக்கத்தலங்களெல்லாம் ஒளியிழந்து காணப்படும் என தவ்ராத்தில் கூறப்பட்டிருப்பது போல் நான் இது வரை வேறு எந்த அடக்கத்தலத்தையும் காணவில்லை" எனக் கூறினார்.
மற்றொரு அறிவிப்பில் அவர் ஜன்னத்துல் பகீவுவை கண்டு வேதத்தில் உள்ளபடி இது இருப்பதை புரிந்துக் கொண்ட பிறகு, அவர் அந்த அடக்கத்தலத்தை மிதிக்காமல் ஒதுங்கி (முதுகு புறத்தைக் காட்டாமல்) பின்னோக்கி சென்று விட்டார் என காணப்படுகிறது.
Comments
Post a Comment