ஈஸா அலை அவர்கள் கூறும் ஸலவாத் ,ஸலாம்
சூஃபிகளின் ஹஜ் : - 53
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
ஈஸா (அலை) அவர்கள்
கூறும் ஸலவாத் , ஸலாம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஈஸா பின் மரியம் (அலை) அவர்கள் நேர்மையான தலைவராகவும், சட்டத்தின்படி ஆட்சி செய்கிறவராகவும் கண்டிப்பாக வானத்திலிருந்து இறங்கி வருவார். உம்மத்தே முஹம்மதியாவின் வழிமுறையைப் பின்பற்றி ஹஜ் அல்லது உம்ராவை செய்வார். ஒரு நேரத்தில் அவர் என் அடக்கத் தளத்திற்கு வந்து, எனக்கு ஸலாம், (ஸலவாத்து) சொல்வார். நான் அவருக்கு பதில் ஸலாம் சொல்வேன்.
நூல் : தைலமி, அபூ யஅலஆ.
ஈஸா (அலை) அவர்கள் இறுதி காலத்தில் பூமிக்கு வருவார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை பின்பற்றிய ஒரு முஸ்லிமாக நபிகளாரின் கப்ரையும் சந்திப்பார்கள். அவர்கள் வாழ வேண்டிய காலம் வாழ்ந்து முடித்த பிறகு மதீனாவில் இறந்துப் போவார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய இடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நபிமொழி திர்மிதீ ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
தவ்ராத் வேதத்தில் நபி (ஸல்) அவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. ஈஸா (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தளத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.
ஸஈத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய அவர்களின் வீட்டில் ஒரு இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் ஈஸா (அலை) அவர்கள் நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.
நூல் : நூல் : அஸ்ஸலாத்து அலந் நபியி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அஹ்காமுஹா, ஃபழாயிலுஹா, ஃபவாயிதுஹா.
எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் மற்றும் ஸலாம் சொல்லுங்கள்.
Comments
Post a Comment