மன்னிக்கப்பட்ட மாமனிதர்
சூஃபிகளின் ஹஜ் : - 61
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
மன்னிக்கப்பட்ட மாமனிதர் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஹள்ரத் துன்னூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
கஃபாவிற்கு அருகில் நான் ஒரு வாலிபரைப் பார்த்தேன். அவர் தொடர்ந்து முழு மூச்சாக ருகூவு, ஸுஜுது செய்து தொழுவதில் ஈடுபட்டிருந்தார்.
நான் அவரிடம், "எப்பொழுது பார்த்தாலும் தொழுது கொண்டே இருக்கின்றீரே!" என்று கேட்டேன்.
அதற்கு அவர் '"நான் ஹஜ் செய்ய வந்திருந்தேன்; அமல்கள் முடிவுற்று விட்டது; இப்பொழுது எனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சில தினங்களாக அனுமதி கேட்டு வருகிறேன்!" என்று பதிலளித்தார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு காகிதத்துண்டு வானிலிருந்து அங்கு விழுந்ததை நான் பார்த்தேன்.
அதில், "இது மிக்க கண்ணியத்திற்கு உரியவனும், மிகவும் மன்னிக்கக்கூடியவனுமான அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுடைய உண்மையான நன்றியுள்ள நல்லடியானுக்கு எழுதப்பட்டது; உன் முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நிலையில் நீ திரும்பிச் செல்வாயாக!" என்று எழுதப்பட்டிருந்தது.
நூல்: ரவ்ழுர் ரைய்யாஹீன்
Comments
Post a Comment