ரவ்ளாவிற்குள் அபூபக்ர் ரலி அவர்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 60
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ரவ்ளாவிற்குள் 
அபூபக்ர் ரலி அவர்கள்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது ; 

ஹள்ரத் அபூ பக்ர் (ரலி) அவர்கள் தம் மரணப் படுக்கையில் இருக்கும்போது என்னை அழைத்து தன் தலைக்கு அருகில் அமரச் செய்து, " நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டிய உங்களுடைய இதே கரங்களினால் என்னையும் குளிப்பாட்ட வேண்டும். 

மேலும் நறுமணம் பூசவேண்டும். பிறகு நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய  ஹுஜ்ராவிற்கு அருகில் எனது ஜனாஸாவை கொண்டு சென்று நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் அடக்கமாவதற்கு அனுமதி கோர வேண்டும். 

அனுமதி கோரியதும் ஹுஜ்ராவின் கதவுகள் திறக்கப்பட்டால் என்னை அங்கு அடக்கம் செய்துவிட வேண்டும். 

இல்லை என்றால் பொதுவாக முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படும்  'பகீவுவில் அடக்கிவிட வேண்டும்" என்று வஸிய்யத்துச் செய்தார் கள்.

ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ; ஜனாஸா தயாரான பிறகு (ரவ்ளாவை அடைந்து) எல்லோருக்கும் முதலாக நான் சென்று "யா ரசூலல்லாஹ் (ஸல்) அவர்களே! இதோ அபூபக்ர் (ரலி) அவர்கள் இங்கு அடக்கமாவதற்காக அனுமதி கோருகிறார்கள்'' என்று கூறியதும், திடீரென ஹுஜ்ரா ஷரீஃபின் கதவுகள் திறந்து கொண்டதை அங்கிருந்த அனைவரும் பார்த்தார்கள். 

உள்ளிலிருந்து "நண்பரை நண்பரிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்" என்று சப்தம் வந்தது. பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

 நூல்: கஸாயிஸ் குப்ரா

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்