நாட்டங்கள் நிறைவேற ஜம்ஜம் தண்ணீரை குடியுங்கள்:
சூஃபிகளின் ஹஜ் : - 56
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நாட்டங்கள் நிறைவேற
ஜம்ஜம் தண்ணீரை குடியுங்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஹள்ரத் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் புகழ்பெற்ற ஹதீஸ் கலை வல்லுநர் ஆவார்கள்.
இவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காகக் குடிக்கப்படுமோ அந்த நோக்கம் நிறைவேறும், என நபி [ஸல்] அவர்கள் அருளியதாக தாங்கள் கூறுகிறீர்களாமே? இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதானா?" என்று கேட்டார்.
அதற்கு சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள், "ஆம்! இது உண்மையான ஹதீஸ்தான்!" என்றார்கள்.
உடனே அம்மனிதர் அப்படி யென்றால் தாங்கள் எனக்கு இருநூறு ஹதீஸ்களைக் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக நான் ஜம்ஜம் தண்ணீரைக் குடித்தேன்" என்றார்.
சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் அம்மனிதரை நோக்கி "உட்காருங்கள்! உங்களுக்கு நான் இருநூறு ஹதீஸ்களை அறிவித்துத் தருகிறேன்" என்றார்கள்.
இப்னு உயைனா [ரஹ்] அவர்கள் மேலும் அறிவிப்பதாவது:
ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது, "யா அல்லாஹ்! மறுமை நாளின் தாகத்தைத் தணிப்பதற்காக நான் இதனைக் குடிக்கின்றேன்" என்று கூறுவார்கள்.
நூல்: கன்சுல் உலூம்.
நான் தகுதியற்றவன் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு இறைநேசரிடம், "தாங்கள் கஅபாவினுள் சென்றது உண்டா?" என ஒருவர் வினவினார்.
அதற்கு அவர், "என் கால்கள், பரிசுத்த இறைவனுடைய வீட்டின் நாலாபுறம் சுற்றவும் கூட தகுதியற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் இப்புனித வீட்டினுள் நுழைய தகுதியானவன் என்று எவ்வாறு நான் எண்ணுவேன்?
என் பாதங்கள் எங்கெங்கு சுற்றியலைந்தன? எந்தெந்த தீமைகளின் பக்கம் நடந்து சென்றன என்பதை நான் நன்கறிவேன்'' எனப் பதிலளித்தார்கள்.
நூல்: இத்திஹாப்
Comments
Post a Comment