அலங்கோலமான ஆடை
சூஃபிகளின் ஹஜ் : - 62
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
அலங்கோலமான ஆடை
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
அபூ ஸயீத் கஹ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நான் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்லும்போது இரு கிழிந்த ஆடைகளை உடுத்தி மக்களிடம் யாசித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டேன்.
நான் என் மனதில், "இப்படிப்பட்டவர்களால்தான் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது; இவர்களெல்லாம் ஏன் இங்கு வருகிறார்கள்?" என நினைத்தேன்.
உடனே அவர் என்னைப் பார்த்து கீழ் வரும் வசனத்தை ஓதினார்.
وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ یَعۡلَمُ مَا فِیۤ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்; (சில தவறான எண்ணங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;) எனவே அவனை அஞ்சி கொள்ளுங்கள்.
2: 232
ஹள்ரத் அபூ ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ; இதைக் கேட்டதும் நான் தவறாக நினைத்ததை வருந்தி தவ்பா செய்தேன். அவர் என்னைப் பார்த்து வேறொரு வசனம் ஓதினார்.
وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُوا عَنِ السَّيِّئَاتِ
அவன், தன் அடியார்களின் மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். (42:25)
மக்கா மற்றும் மதீனாவில் ஹரம் எல்லைக்குள் அலங்கோலமான ஆடைகளோடு உலாவும் ஆண்களையும் பெண்களையோ தவறாக நினைத்து விடாதீர்.
அவர்கள் அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் பெற்றவர்களாக இருக்கக்கூடும்.
Comments
Post a Comment