நபிகள் நாயகம் ஜம்ஜம் தண்ணீரை பருகிய விதம்
சூஃபிகளின் ஹஜ் : - 59
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நபிகள் நாயகம்
ஜம்ஜம் தண்ணீரை பருகிய விதம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வாளியில் ஜம்ஜம் தண்ணீரை இறைக்கும்படி உத்தரவிட்டார்கள். வாளியால் தண்ணீர் இறைக்கப்பட்டு கிணற்றின் கைப்பிடி சுவற்றின் மீது வைக்கப்பட்டது.
நபி [ஸல்] அவர்கள் அந்த வாளியைக் கையால் பிடித்து "பிஸ்மில்லாஹ்" எனச் சொல்லி வெகு நேரம் வரை பருகினார்கள். பிறகு "அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி நிறுத்தினார்கள்.
மீண்டும் "பிஸ்மில்லாஹ்" எனச் சொல்லி நீண்ட நேரம் குடித்தார்கள். பின்னர் "அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி நிறுத்தினார்கள்.
அதற்குப்பின், “நமக்கும் நயவஞ்சகர்களுக்கும் உள்ள வித்தியாசம், அவர்கள் இதனை மிதமிஞ்சி வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள் என்பதே" என்று கூறினார்கள்.
நூல் : இஹ்யா உலூமித்தீன்
ஒரு ஹதீஸில் கூறப்படுவதாவது: நபி [ஸல்] அவர்கள், ஹள்ரத் அப்பாஸ் [ரலி] அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரைக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இந்தத் தண்ணீரில் எல்லோரும் கைவிடுகிறார்கள் ; அதாவது ஜம்ஜம் தண்ணீர் ஹவுளு போன்ற ஒரு தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் சுத்தமான நீர் இருக்கின்றது. அதிலிருந்து கொண்டு வரவா?" என வினவினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம்! எதிலிருந்து ஜனங்கள் பருகுகிறார்களோ அதிலிருந்தே கொடுங்கள் " என அருளினார்கள்.
அவ்வாறே அவர்களும் கொண்டுவந்து கொடுக்க, நபி [ஸல்] அவர்கள் அதனைக் குடித்தார்கள்.
பிறகு தம் கண்களின் மீது தெளித்துக் கொண்டார்கள். மறுபடியும் இரண்டாம் முறையாக வாங்கி பருகினார்கள். மறுபடியும் தங்களின் மீது அதனைத் தெளித்துக் கொண்டார்கள்.
நூல்: கன்சுதகாயிக்
Comments
Post a Comment