த.வெ.க.வின் வெற்றி திட்டமிடப்பட்டதே!
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ 2:216)
நீங்கள் வெறுக்கும் ஒன்று
உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் விரும்பும் ஒன்று உங்களுக்கு தீமையாக இருக்கலாம். அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
நாம் எதிர்பார்த்த கட்சி தோல்வி அடைந்தது கஷ்டமாக தோன்றும்.
ஆனால், அது சமூகத்திற்கோ, இஸ்லாம் மார்க்கத்திற்கோ நீண்டகால நன்மையாக இருக்கலாம்.
உங்களின் உணர்ச்சிகளை விட அல்லாஹ்வின் திட்டத்தில் அதிகமாக நம்பிக்கை வையுங்கள்.
நாம் உணர்வுகளால் முடிவெடுக்கின்றோம்
அல்லாஹ் அறிவால் முடிவெடுக்கின்றான்.
நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நமக்கு நிம்மதி கிடைப்பதோடு நாம் எதிர்பார்த்த நன்மை விரைவில் கிடைக்கும்.
பொறுமையாக இருக்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் தன் மகன் மூசாவை ஆற்றில் விட்டு விட்டு துஆ செய்தார்; அல்லாஹ் ஃபிர்அவ்னிடமே அனுப்பிவைத்து அவரை வளர்த்து ஆளாக்கினான்; மூசா நபியை வைத்தே மீண்டும் பிஃர்அவ்னை அழிக்கவும் செய்தான்.
அது போல் இறைவன் ஏதேனும் ஒரு மேஜிக் செய்யலாம்.
இறை மறுப்பாளரான அபுதாலிப் அவர்கள் நபிகள் நாயகம் அவர்களை தன் உயிர் இருக்கும் வரை பாதுகாக்க வைத்தான்.
இறைவனின் முடிவை ஏற்றுக் கொண்டு அவன் மீது பொறுப்பைச் சாட்டி விட்டு உங்கள் வேலையை பாருங்கள் அவன் நல்லதே செய்வான்.
நாம் அனைவரும் சேர்ந்து ஒருவரை வெற்றி பெற வைத்து விடலாம் என முனைந்தும் முடியாமல் போய்விட்டது.
அவரை வெற்றி பெற வைப்பதின் நோக்கம் இஸ்லாமியர்களும் பொது சமூகமும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!
இறைவன் இதே பணியை வேறு ஒருவரையும் வைத்தும் கூட செயல்படுத்தலாம் நம்புங்கள்.
நமது சிந்தனையும் செயலும் தற்காலிகமான முடிவை நோக்கியே இருக்கும்.
இறைவனின் சிந்தனையும் செயலும் நிரந்தரமான நலவை நோக்கியே இருக்கும்.
அல்லாஹ் தேர்ந்தெடுத்தவற்றில் நல்லதே இருக்கிறது என்பதே உண்மை!
நாம் இன்று பார்க்கும் இந்த தோல்வி, நாளை ஒரு பெரிய நன்மைக்கான தொடக்கமாக இருக்கலாம்.
இன்று நமக்கு பிடிக்காத இந்த வெற்றி, நாளை நம்மை பாதுகாக்கும் ஒரு காரணியாக இருக்கலாம்.
நமக்கு எல்லாம் தெரியும் என்று நாம் நினைத்தாலும், உண்மையில் முழுமையாக அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
நாம் நினைப்பது நடக்கவில்லை என்பதால் அல்லாஹ் நம்மை கை விட்டுவிட்டான் என்று அர்த்தமில்லை. மாறாக, அவன் நமக்காக இன்னும் சிறந்த ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.
இன்று நாம் சோர்ந்து போகாமல், உற்சாகமாக எழுந்து நிற்க வேண்டும். நம் முயற்சியை தொடர வேண்டும். நம் துஆவை அதிகரிக்க வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள்! தோல்வி என்பது முடிவு அல்ல.
அது ஒரு புதிய தொடக்கம்.
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
இறைவா! நீயே ஆட்சிகளின் அதிபதி!
நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறாய் !
நீ விரும்பாதவர்களிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய் !
நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய் !
நீ விரும்பாதவர்களை கண்ணியம் இழக்க செய்கிறாய்!
எல்லா வகை நலவுகளும் உன் கைகளேயே உள்ளது!
நீ அனைத்தையும் செய்ய ஆற்றல் பெற்றவன். (3:26)
நீ எதை இழந்தாயோ அதற்காக கவலைப்படாதே! ஏனென்றால் அது உனக்கு உரியது அல்ல!
என்று ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுவார்கள்.
நாம் அமைதி காப்போம்! அனைத்தையும் பெறுவோம்!
Comments
Post a Comment