த.வெ.க.வின் வெற்றிக்கு காரணம் இரண்டுதான்

த.வெ.க.வின் 
வெற்றிக்கு காரணம் இரண்டுதான் 
=================================
1.  பத்து வயதிற்கு உட்பட்ட சிறார்களிடமும் குழந்தைகளிடமும் "குட்டீஸ்களே! சாக்லேட் கேட்பது போல் அடம்பிடித்து எனக்காக, இந்த மாமாவுக்காக ஓட்டு கேளுங்கள்" என்று பேசி குழந்தைகளை தூண்டிவிட்டு ஓட்டு போட வைத்தது முதல் காரணம்.

(தன் சுயலாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் இது.)

2.  தனியார் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நன்கு படித்துவிட்டு உடனுக்குடன் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை என்கிற விரக்தியிலும் ஆதங்கத்திலும் இருந்த 40 வயதிற்கு உட்பட்டவர்களின் எதிர்ப்பும்,

திமுக, அதிமுக போன்ற சில கட்சியில் சேர்ந்த சிலர் 40 வயதுக்குள் பெரும் செல்வம் சேர்த்திருந்தவர்களை பார்த்து பொறாமைப்பட்ட அல்லது ஆவேசப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் ஆவேசத்தினால் தான் த.வெ.க. உருவெடுத்துள்ளது.

இளைஞர்களும் இளைஞிகளும் ஒரு அரசியல்வாதியிடம் அநேக செல்வம் சேர்வது குறித்து ஆவேசப்பட்டும் பொறாமை பட்டும் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால் த.வெ.க.வில் உள்ள 107 எம்.எல்.ஏ. க்களும் இதே வேலையைத்தான் எதிர்வரும் ஐந்து வருடங்களில் செய்யப் போகிறார்கள்.  புதிதாக 107 செல்வந்தர்கள் உருவாகப் போவது உறுதி.

ஓட்டு போட்ட இளைஞர்களும் இளைஞிகளும் என்ன செய்யப் போகிறீர்கள்?

இப்பொழுது எல்லோருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டிருக்கிற பொதுவான சலுகைகளும் உரிமைகளும் கூட இந்த ஆட்சியின் இறுதி காலத்தில் கிடைப்பது அரிதுதான்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்