நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்
நபி (ஸல்) அவர்களை
==========================
எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த அபூ அனஸ் அப்துல் அஸீஸ் அஹமது அப்துல் அஸீஸ் என்பவர், "ரஅய்துந் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஅது கிஸ்ஸதின் மின் ருஃயின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன் - நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்ததாக சொல்லப்படும் நூறு நிகழ்ச்சிகள் " என்றொரு நூலை 2005 ஆம் ஆண்டு எழுதி இருக்கின்றார். அதை 'தாருல் ஆலமிய்யா' எனும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதை மொழிபெயர்க்க வேண்டும் என நீண்ட வருடங்களாக ஆசைப்பட்டேன். அதற்கான நேரம் அமையவில்லை. மன்னிக்கவும் அதற்கான நேரத்தை எனக்கு அல்லாஹ் அமைத்துத் தரவில்லை. இப்பொழுது தான் அதை எழுத வேண்டும் என இறைவன் எனக்கு நேரத்தை வழங்கி இருக்கின்றான்.
எனவே அந்த நூலை ஒவ்வொரு மாதமும்
'முஸ்லிம் இதய குரல்' மாத இதழில் தொடர்ந்து எழுதலாம் என நினைத்திருக்கின்றேன்.
இந்த நூல் முழுமையாக எழுதி வெளிவர தாங்கள் அனைவரும் எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும், முஸ்லிம் இதயக் குரல் ஆசிரியருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசித்து வந்தால், ஆன்மீகத்தில், இஸ்லாமிய ஈடுபாட்டில் உச்சநிலையை அடைய முடியும் என நான் கருதுகிறேன்.
நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது குறித்த விதிமுறைகள், சட்டதிட்டங்கள், மார்க்கத்தின் ஒழுங்குகள் குறித்து ஆரம்பமாக சில செய்திகளை பதிவிடுகிறேன்.
மேலும் நபி (ஸல்) அவர்களை கனவில் காண விரும்புவோர் செய்ய வேண்டிய செயல்களையும் பதிவிட இருக்கின்றேன்.
எனவே அது குறித்த செய்திகள் சிறிதளவும் , கனவு கண்டவர்கள் குறித்த சம்பவங்களில் சிலதும் மாத மாதம் எழுத முடிவு செய்து இருக்கிறேன். வாசித்ததை வாழ்க்கையாக்குங்கள்; வளம் பெறுவீர்.
கனவுகள் தொடரும்.....
Comments
Post a Comment