ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்.....
ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்.....
மன அழுத்தத்தின் காரணமாகவோ மனநிலை சரியில்லாத நிலையில் இருந்தோ அல்லது எந்த காரணமும் இல்லாமல் வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரும் பாவச் செயலாகும்.
وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
உங்களை நீங்களே (தர்) கொலை செய்து கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்
இந்த வசனத்தின் அடிப்படையிலும் மற்றும் பல நபி மொழிகளின் அடிப்படையிலும் தற்கொலைச் செய்து கொள்ளவும், கருணைக் கொலை செய்யவும் மார்க்கத்தில் அனுமதி இல்லை. அது ஹராம் - ஆகாதச் செயலாகும்.
ஒரு முஸ்லிம் தற்கொலைச் செய்துகொண்டு இறந்து விட்டால், அவருக்கு ஜனாஸா தொழுகை மற்றும் ஈஸால் ஸவாப் - நன்மையை எத்தி வைக்கும் அமல்கள் செய்வது கூடுமா?
وقال الحسن والنخعي وقتادة ومالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء يصلى عليه،
தற்கொலை செய்து கொண்டவர் அவசரகதியில் தவறான முடிவு எடுத்து இறந்து போய்விட்டார். அவருக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பானோ அதை வழங்குவான். அது கடுமையாகவும் கூட இருக்கும்.
ஆனால் முஸ்லிமாக பிறந்த அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை கட்டாயமாகும்.
அதைப்போல் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்ட ஒருவருக்காக ஈஸால் ஸவாப் - நன்மையை நாடி நல்லறங்கள் செய்வது, உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் மீதும் பொறுப்பாகும்.
எனவே ஜனாஸா தொழுகை தொழ வைப்பதும், அவருக்காக ஈஸால் ஸவாப் - நன்மையான காரியங்களில் உயிரோடு இருப்பவர்கள் ஈடுபடுவதும் ஆகுமானதே!
இந்தக் கருத்தை நான்கு மத்ஹப் இமாம்கள் மற்றும் ஹதீஸ் , குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட கருத்தாகும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியைப் பாருங்கள்.
https://www.islamweb.net/ar/fatwa/2386/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%B9%D9%84%D9%89-%D9%82%D8%A7%D8%AA%D9%84-%D9%86%D9%81%D8%B3%D9%87
கொலை, விபச்சாரம், திருடு, மது அருந்துவது போன்ற மிகப்பெரும் பாவங்களை விடவும் மிகப் பெரும் பாவச் செயல் தற்கொலை செய்து கொள்வது .
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا (48 :4:
ஷிர்க் - இணைவைத்தலை தவிர அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என மேற்கட்ட வசனம் கூறுகிறது.
தற்கொலை செய்து கொண்டவரை மன்னிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! எனவே அல்லாஹ் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாம் அவனுக்கு வழி காட்ட வேண்டாம். இந்த விஷயத்தில் வீண் விவாதங்கள் செய்து கொண்டிருக்கக் கூடாது எனவும் மார்க்கம் சொல்கிறது.
எனவே நாம் செய்ய வேண்டிய நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
காலம் சென்ற மஹபூப் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, உயர்ந்த சொர்க்கம் ஆகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்சை வழங்கிடுவானாக ஆமீன்!
இது சார்ந்த மேலதிக தகவல்களை விரிவாக காண விரும்புவோர் இந்த விலாசத்தில் காணுங்கள்.
https://www.islamweb.net/ar/fatwa/168453/%D9%87%D9%84-%D9%8A%D8%BA%D9%81%D8%B1-%D9%84%D9%82%D8%A7%D8%AA%D9%84-%D9%86%D9%81%D8%B3%D9%87-%D9%88%D9%87%D9%84-%D9%8A%D8%AF%D8%B9%D9%89-%D9%84%D9%87-%D9%88%D9%8A%D8%AD%D8%AC-%D9%88%D9%8A%D8%AA%D8%B5%D8%AF%D9%82-%D8%B9%D9%86%D9%87
Comments
Post a Comment