ஹம்ஜா (ரலி)

சூஃபிகளின் ஹஜ் : - 47
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஹம்ஜா (ரலி) :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

உஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹள்ரத் ஹம்ஜா [ரலி] அவர்கள் உஹது போர்க்களத்தில் ஷஹீதானார்கள். 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹள்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களுடைய கப்ரின் அருகிலிருந்தோம். 

அவர்களுக்கு கஃபனாக ஒரு சிறு துண்டுத் துணிதான் இருந்தது. அது உடல் முழுவதும் போர்த்த  போதுமானதாக இருக்குவில்லை; 

அதனால் முகத்தை மூடினால் கால்கள் திறந்து விடுகின்றன; கால்களின் பக்கம் இழுத்தால் முகம் திறந்து கொள்கிறது. 

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "போர்வையால் முகத்தை மூடிவிடுங்கள்; கால்களுக்கு மரத்தின் இலைகளை வைத்து மறையுங்கள்" என்று கூறினார்கள். 

இந்த நிலையைக் கண்ட ஸஹாபாக்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "ஒரு காலம் வரும்; அப்பொழுது மனிதர்கள் செழிப்பான பிரதேசங்களை நோக்கிச் செல்வார் கள். 

அங்கு அவர்களுக்கு உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் நல்ல பொருட்கள் கிடைக்கும். அதிகமான வாகனங்களும் கிடைக்கும். 

அப்பொழுது அங்கிருந்து தங்களுடைய குடும்பத்தினருக்கு "நீங்கள் பஞ்சம் படர்ந்த ஹிஜாஸ் பிரதேசத்தில் ஏன் கிடக்கிறீர்கள்? இங்கு வந்து விடுங்கள்" என கடிதம் எழுதுவார்கள். 

ஆனால் மதீனா அவர்களுக்கு சிறந்ததாகும். இந்த விஷயத்தை அவர்கள் அறிந்திருக்கவேண்டுமே!" என்று அருளினார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்