நபிகள் நாயகத்தை ஜியாரத்து செய்யுங்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 45
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

நபிகள் நாயகத்தை 
ஜியாரத்து செய்யுங்கள் : 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

மக்கா முகர்ரமாவில் இப்னு ஸாபித் (ரஹ்) எனும் இறைநேசர் வாழ்ந்து வந்தார்கள். 

அறுபது வருட காலமாக ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜு செய்த பிறகு நபி (ஸல்) அவர்களின் ஜியாரத்திற்காக மதீனாவிற்கு வருவார்கள். 

சில நாட்கள் தங்கி இருந்து ஜியாரத் செய்து விட்டு மக்காவிற்கு திரும்பிச் செல்வார்கள். 

ஓரு வருடம் ஏதோ நிர்பந்தமான வேலைகளின் காரணமாக ஜியாரத்துச் செய்ய மதீனா செல்லவில்லை. 

இந்நிலையில் இப்னு ஸாபித் (ரஹ்) அவர்கள் தமது அறையில் அமர்ந்திருக்கையில் சிறு தூக்கம் ஏற்பட்டு உறங்கினார்கள். 

அப்பொழுது கனவில் நபி [ஸல்] அவர்கள் காட்சியளித்தார்கள். 

நபி [ஸல்] அவர்கள் "இப்னு ஸாபித்! நீங்கள் என்னை சந்திக்க வராததால் நானே உங்களை சந்திக்க வந்து விட்டேன்" என்று கூறினார்கள்.

நூல்: அல் ஹாவில் கபீர்

ஓர் அரிதான ஸியாரத்: 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

ஹள்ரத் சையித் அஹ்மத் ரிபாயீ [ரஹ்]  அவர்கள் ஹிஜ்ரீ 555-இல் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு ஜியாரத்திற்காக மதீனா வந்தார்கள். 

நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃபிற்கு முன்பாக நின்று இரு கவிதைகளைப் படித்தார்கள்.

فِي حَالَةِ الْبُعْدِ رُوحِي كَنْتُ ارْسِلُهَا ، 

تُقَبِّلُ الْأَرْضَ عَنِي وَهِيَ نَائِبَتِي 

وَهَذِهِ دَولَةُ الْأَشْبَاحِ قَدْ حَضَرَتُ ، 

فَامُدُ دُيَمِينَكَ لَمْ تَخْطِي بِهَا شَفَتِي

தூரத்திலிருக்கும் போது என் ஆன்மாவை தங்களின் மேலான திருச்சமூகத்திற்கு சேவைக்காக அனுப்பிக் கொண்டிருந்தேன். 

அது என் தூதராக வந்து தங்களின் முபாரக்கான கப்ரு ஷரீபை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. 

இப்பொழுது  உடல்கள் சந்திக்கும் வேளை வந்துள்ளது. 

தங்களின் திருக்கரத்தை அளித்திடுங்கள்! என் உதடுகள் அதனை முத்தமிடட்டும்."

இவ்வாறு ஹள்ரத் சையித் அஹ்மத் ரிபாயீ [ரஹ்] அவர்கள் கூறியதும், கப்ரு ஷரீபிலிருந்து நபிகள் நாயகத்தின் பரிசுத்த கைகள் வெளிப்பட்டது. 

அவர்கள் நபிகளாரின் கரங்களை முத்தமிட்டார்கள். 

அச்சமயம் தொண்ணூராயிரம் பேர் மஸ்ஜிதுந் நபவியில் கூடி இருந்ததாக கூறப்படுகின்றது. 

அங்கிருந்த அனைவரும்
இக்காட்சியைப் பார்த்து நபி [ஸல்] அவர்களின் திருக்கரங்களின் ஜியாரத்தும் செய்தனர். 

அக்கூட்டத்தில் ஹள்ரத் மஹ்பூபே சுப்ஹானி ஷேக் அப்துல் காதிர் ஜீலானி [ரஹ்] அவர்களும் இருந்தாகவும் சொல்லப்படுகின்றது.

நூல்: அல்பயானுல் மஷ்ஹத்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்