ரவ்ளாவிற்குள் செல்லும்போது நம் மனநிலை

சூஃபிகளின் ஹஜ் : - 52
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ரவ்ளாவிற்குள் 
செல்லும்போது நம் மனநிலை :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

இமாம் கஸ்ஸாலீ [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள்;  

நபி (ஸல்)  அவர்களைக் காண ரவ்ளாவிற்குள் நாம் நுழையும்போது, இந்த இடத்தில் தானே  நபிகளாரைச் சுற்றி ஸஹாபாக்கள் கூட்டம் கூட்டமாக  அமர்ந்திருந்து  அன்னாரின் பரக்கத்துகளை பெற்றார்கள். 

இந்த இடத்தில் தானே அன்னாரின் இனிய உபதேசங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும்  கேட்டுக்கொண்டிருந்தார்கள் என அந்த நாட்களை நினைத்துப் பார்க்க வேண்டும். 

எனக்கு நபி (ஸல்) அவர்களையும், ஸஹாபாக்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்பதை எண்ணி வருத்தமும், கவலையும், துக்கமும் கொண்டவர்களாக செல்ல வேண்டும். 

நபிகளாரும் நபித்தோழர்களும் வாழ்ந்த காலத்தில் இறைவன் என்னை பிறந்திருக்கச் செய்ய வேண்டுமே என எண்ணி வருத்தத்தோடு செல்ல வேண்டும்.

நபிகளாரை உலகில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. ஆனால் மறுமை நாளில் என்  நிலை என்னவாகுமோ தெரியாது! 

அன்னாரின் தரிசனம் மகிழ்வுடன் கிடைக்குமோ? அல்லது வெறுப்பான  நிலையில் கிடைக்குமோ? 

அன்னாரின் சமூகத்திலிருந்து விரட்டப்பட்டு விடுவோமோ? தனது தீய செயல்கள் அன்னாரின் தரிசனத்திற்கு இடையில் திரையாக வந்து தடையாக ஆகிவிடக்கூடாதே! என அஞ்சவேண்டும். 

"ஏனெனில் மறுமை  நாளில் சில மனிதர்கள் என்னை விட்டும் தூரமாக்கப்படுவார்கள். 

'இவர்கள் என்னுடைய உம்மத்தவர்களாயிற்றே' என நான் கூறுவேன். "உங்களுக்குப் பின்னால் இவர்கள் என்னென்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என பதிலளிக்கப்படும் "என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நூல் : இஹ்யா உலூமிதீன்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்