அமல்களில் சிறந்தது

சூஃபிகளின் ஹஜ் : - 44
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அமல்களில் சிறந்தது
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 

“அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். 

“பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. 

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். 

“பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்று கூறினார்கள். 

நூல்: புகாரி 

அன்று பிறந்த பாலகர் : 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°

1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல்: புகாரி 

மூன்று செயல்கள்: 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அப்துர் ரஹ்மான் பின் ஷிமாஸா அல் மஹ்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களது மரணத் தருவாயில் நாங்கள் அவரிடம் சென்றிருந்தோம். 

நெடுநேரம் அழுத பின்னர் அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். 

அப்போது, “அருமைத் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறியிருக்கிறார்களே! (ஏன் அழுகிறீரீ)?” என்று அவரின் மகன் கேட்டார். 

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை(த்தம் மகனை நோக்கி)த் திருப்பி, “நமது சேமிப்புகளுள் மிகச் சிறந்தது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும், முஹம்மது (ஸல்)  அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறியதுதான். 

நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருந்ததில்லை. 

முடியுமெனில் அவர்களைக் கொன்றுவிடுவது எனக்கு மிக்க விருப்பமானதாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்திருந்தால் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை(ப் பற்றிய சிந்தனையை) ஏற்படுத்தினான். 

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள்; நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன் என்று கூறினேன். 

நபி (ஸல்) அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். ஆனால், நான் என் கையை இழுத்துக் கொண்டேன். 

நபி (ஸல்) அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். 

நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றேன் என்று கூறினேன். 

நபி (ஸல்) அவர்கள், எந்த விஷயத்தில் நிபந்தனைகளை விதிக்கப்போகிறீர்? என்று கேட்டார்கள். 

எனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் புதிதாக இஸ்லாத்தில் இணையும்போது அவருடைய முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; 

இஸ்லாத்துக்காக நாடுதுறக்கும் தியாகமான - ஹிஜ்ரத் முந்தைய பாவங்களை அழித்து விடும்; 

(இஸ்லாமியக் கடமையான) ஹஜ் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். 

(பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) 

அவ்வேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நான் விரும்பும் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; 

எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் எனது கண்களால் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்க்கக்கூட  முடியவில்லை. 

அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் என்னால் இயலாமலாகிவிடும். 

ஏனெனில், அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் நான் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. 

அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. 

எனவே, நான் இறந்து விட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என்னை நெருங்கக் கூடாது. 

என்னை (குழிக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும் போது என் மீது மண்ணைத் தள்ளுங்கள். 

பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரமளவுக்கு நீங்கள் என் மண்ணறையைச் சுற்றி நில்லுங்கள். 

உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்)களிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டு கொள்வேன்” என்று அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

நூல் : முஸ்லிம்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்