காபா
சூஃபிகளின் ஹஜ் : - 40
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
கஅபா :
=÷=÷=÷=÷=
தூர்ஸினாய் மலையில் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்த்து மூர்ச்சை அடைந்தது போல் ,
மக்கா நகரில் கஅபாவைப் பார்த்ததும் ஒவ்வொரு ஹாஜியும் தன்னிலை மறந்து, புத்தி பேதலித்தவரைப் போல் காணப்பட வேண்டும்.
மேலும் கஅபாவைப் பார்த்ததும் அதன் உரிமையாளனை தரிசித்தது போன்று உணர்வு ஏற்பட வேண்டும். மேலும் அச்சமயம் அல்லாஹ்வின் மீது மரியாதையும், கண்ணியமும், அச்சமும், நடுக்கமும் உண்டாக வேண்டும்.
கஅபாவின் மதிப்பு :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உமர் [ரலி] அவர்கள் குரைஷிகளை நோக்கி "உங்களுக்கு முன்பு அமாலிகா சமுதாயத்தினர் கஅபாவின் நிர்வாகிகளாக இருந்தார்கள். அவகள் கஅபாவை முறையாக கண்ணியப்படுத்த வில்லை.
மேலும் எவ்வாறு இதனை மரியாதையாக நடத்த வேண்டுமோ அவ்வாறு மரியாதையாக நடத்தவில்லை.
அல்லாஹ் அவர்களை அழித்து விட்டு ஜுர்ஹும் கூட்டத்தினரை கஅபாவிற்கு நிர்வாகிகளாக ஆக்கினான். பின்னர் அவர்களும் இதனை அவமதித்தனர்.
அவர்களையும் அல்லாஹ் நாசமாக்கி லிட்டான். இன்று நீங்கள் கஅபாவிற்கு நிர்வாகிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இதனை கண்ணியப்படுத்துவதோடு பெருமையாக கருதி வாருங்கள். இதில் அலட்சியம் காட்ட வேண்டாம்" என்று கூறினார்கள்.
நூல்: கன்சு தகாயிக்
கஅபா உள்புறம் :
°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°
அல்லாமா முல்லா அலீ ஜாமியீ (ரஹ்) அவர்களிடம் ஒரு மாணவர், "தாங்கள் கஅபாவினுள் சென்றது உண்டா?" என்று வினவினார்.
அதற்கு அல்லாமா முல்லா அலீ ஜாமியீ (ரஹ்) அவர்கள், "என்னுடைய கால்கள், பரிசுத்த இறைவனுடைய வீட்டின் நாலாபுறமும் தவாஃப் - சுற்றகூட தகுதியற்றதாக இருக்கின்றது.
இந்நிலையில் இப்புனித வீட்டினுள் பிரவேசிக்க தகுதியானவன் என நான் எப்படி கருதுவேன்? என் பாதங்கள் எங்கெங்கு சுற்றியலைந்தன? எந்தெந்த தீமைகளின் பக்கம் நடந்து சென்றன என்பதை நான் நன்கறிவேன்'' எனப் பதிலளித்தார்கள்.
நூல் : இத்திஹாப்
Comments
Post a Comment