நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை - 4

சூஃபிகளின் ஹஜ் :- 30
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

நபிகள் நாயகம் செய்த 
ஹஜ்ஜின் செயல்முறை 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
தொடர் ....4

துல்ஹஜ் பிறை  : .....1

ஜமரத்துல் அகபா: 

நபி (ஸல்) அவர்கள் மினாவை  சென்றடைந்ததும்  ஜவால் - சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த பிறகு ஜமரத்துல் அகபா -  பெரிய ஷைத்தானிற்கு மட்டும் கல் அடித்தார்கள். 

இங்கே கல் அடிக்கும் வரை தல்பியாவை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கல்லடித்த பிறகு தல்பியாவை நிறுத்தி விட்டார்கள். 

பின்னர் மினாவில் தமது தங்கும் இடத்திற்கு வந்து நீண்ட நேரம் உபதேசம் செய்தார்கள். பின்னர் குர்பானீ கொடுக்கும் இடத்திற்குச் சென்று 63 ஒட்டகங்களை தமது கைகளால் அறுத்தார்கள். 

மீத ஒட்டகங்களில் 37 லை அலீ (ரலி) அவர்கள் அறுத்து பலியிட்டார்கள். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் 100 ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். 

தமக்கான ஒரு குர்பானி போக மீதமுள்ள 99 குருபானிகளும் முழு உம்மத்தினருக்கு வழங்கப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வொரு குர்பானீ ஒட்டகத்தில் இருந்தும் சிறிதளவு இறைச்சியை எடுத்து வந்து சமைத்து அதன் சால்னாவை தமக்கு வழங்கும்படி அலீ (ரலி) அவர்களிடம் நபிகளார் கூறினார்கள். 

அதைப்போல் அவர்கள் செய்தும் கொடுத்தார்கள். அதனால் அனைத்து ஒட்டகங்களிலிருந்தும் தாம் சாப்பிட்டது போலும் அதன் பரக்கத்தை தான் அனுபவித்தது போலும் ஆனது. 

பின்னர் ஸஹாபாக்களிடம் தாங்கள் வேண்டிய அளவு இந்த ஒட்டகங்களில் இருந்து எடுத்து சமைத்து சாப்பிடுங்கள் என பொது அறிவிப்புச் செய்தார்கள். 

பின்னர் தமது மனைவியர் சார்பாக ஒரு மாட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்கள். 

குர்பானி கொடுத்த பிறகு மஃமர் (ரலி) மற்றும் கர்ராஷ் (ரலி) ஆகிய இருவரும் நபிகளாருக்கு தலை முடியை முழுமையாக மழித்து, மொட்டை அடித்தார்கள். மீசையை கத்தரித்து, தாடியை ஒதுக்கி நகங்களை வெட்டினார்கள். நகமும், முடியும் அனைத்து ஸஹாபாக்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. அதைத் தோழர்கள் பரக்கத்திற்காகவும், நினைவார்த்தமாகவும் வைத்துக் கொண்டார்கள்.

பின்னர் இஹ்ராமை கலைந்து விட்டு, தமக்கான ஆடைகளை அணிந்து கொண்டார்கள். நறுமணம் பூசிக் கொண்டார்கள். அதிகமான நபித் தோழர்கள் அங்கே கூடி ஹஜ் சம்பந்தமான மஸாயில்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

துல் ஹஜ் பிறை 10 அன்று பெரிய ஷைத்தானுக்கு கல் அடித்தல், குர்பானி கொடுக்குதல், மொட்டை அடித்தல், தவாஃபே ஸியார செய்தல் ஆகிய நான்கு பணிகளை மேற் சொன்ன வரிசை முறைப்படியே நபி (ஸல்) அவர்கள் செய்து முடித்தார்கள்.

மேற்கண்ட நான்கு அமல்களில் சிலவற்றை நபித்தோழர்கள் முன் பின் செய்தார்கள். அவை பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்