தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலும் கருத்துகளாலும் இறைவனை ஈர்க்கும் வண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள் :
சூஃபிகளின் ஹஜ் : - 48
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
தேர்ந்தெடுக்கப்பட்ட
சொற்களாலும் கருத்துகளாலும் இறைவனை ஈர்க்கும் வண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
அபூ ஸஈத் அப்துல் மலிக் பின் கரீப் பின் அப்துல் மலிக் பின் அலீ பின் *அஸ்மயீ* அல் பாஹிலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு கிராமப்புற அரேபிய மனிதர், நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தளத்திற்கு முன்பு நின்று கொண்டு, "யா அல்லாஹ்! நபிகள் நாயகம் அவர்கள் உன் அன்பராக இருக்கின்றார்கள்.
நானோ உன் அடிமை.
ஷைத்தானோ உன் விரோதி.
நீ என்னை மன்னித்து விட்டால் உன் மஹ்பூப் (ஸல்) அவர்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும்!
உன் அடிமையான நான் வெற்றி பெற்று விடுவேன்.
உன் விரோதியின் உள்ளம் துடிதுடித்து வெதும்பும்.
நீ என்னை மன்னிக்காவிட்டால் உன் மஹ்பூப் (ஸல்) அவர்களுக்கு வருத்தம் உண்டாகும்.
உன் விரோதி மகிழ்ச்சி அடைவான்.
மேலும் உன் அடிமையான நான் நாசமடைந்து விடுவேன்.
யா அல்லாஹ்! தயாள குணமுள்ள பெரிய தலைவர் எவரேனும் இறந்துவிட்டால் அவருடைய கப்ரின்மீது அடிமைகளை விடுதலைச் செய்வது அரபு நாட்டின் வழக்கம்.
நபிகள் நாயகம் அவர்களோ அகிலங்களின் தலைவராக இருக்கின்றார்கள்.
இவர்களின் கப்ரின் மீது எனக்கு நீ நரக நெருப்பிலிருந்து விடுதலை வழங்குவாயாக!'' என பிரார்த்தனைச் செய்தார்.
அஸ்மயீ (ரஹ்) அவர்கள் கிராமப்புற அரேபியரை அழைத்து "இன்ஷா அல்லாஹ் உமது பிரார்த்தனையை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான். உம்மை நிச்சயமாக மன்னித்து விடுவான்" என்று கூறினார்கள்.
நூல் : மவாஹிபு லதுன்னிய்யா
அழகிய வார்த்தைகளால் அல்லாஹ்வை புகழ்வதும், அழகிய கருத்துகளால் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்பதும் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது.
நாமும் அல்லாஹ்விடம் அவ்வாறு முராக்கபா - நெருங்கி பேசுவோம். நெருக்கம் பெறுவோம்! நெருக்கடிகளில் இருந்து நீக்கம் அடைவோம்.
Comments
Post a Comment