நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -6

சூஃபிகளின் ஹஜ் :- 32
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

நபிகள் நாயகம் செய்த 
ஹஜ்ஜின் செயல்முறை
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

தொடர்.....-6 முடிவுற்றது...

அமீருல் ஹஜ் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்த பிறகு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ்வை சென்றடைந்தார்கள். 

பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்த கலீஃபா அபூ பக்ர் (ரலி) அவர்கள் முதலாம் வருடம் ஹஜ் செய்ய இயலவில்லை அதனால் 'அமீருல் ஹஜ்' ஆக உமர் (ரலி) அவர்களை நியமித்து அனுப்பி வைத்தார்கள். இரண்டாம் வருடம் அபூ பக்ர் (ரலி) அவர்களே ஹஜ்ஜுக்கு சென்று மக்களை வழி நடத்தினார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் மரணித்த பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆனார்கள். அவ்வருடம் அவர்களால் ஹஜ் செய்ய இயலவில்லை. அதனால் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் தாமே அமீருல் ஹஜ்ஜாக இருந்து உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய வைத்தார்கள். 

தமது இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அன்றிருந்த அனைவரையும் அழைத்துச் சென்று ஹஜ் செய்ய வைத்தார்கள்.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றார்கள்.  முதல் வருடம் அவர்களால் ஹஜ் செய்ய இயலவில்லை. தமக்குப் பகரமாக  அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் ஹிஜ்ரி 25 முதல் ஹிஜ்ரி 34 வரை தாமே அமீருல் ஹஜ்ஜாக இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஹஜ் செய்ய வைத்தார்கள்.

இறுதி வருடம் தாம் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ் - ஹஜ்ஜின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் கலீஃபாவாக பொறுப்பேற்ற அலீ (ரலி) அவர்கள் ஜமல், ஸிஃப்பீன் போன்ற யுத்த நடவடிக்கைகளால், அவர்களால் ஹஜ்ஜு செய்யவே இயலாமல் போனது.

இதுதான் நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் வழிமுறைகளாகும்.

மேற்கண்ட அனைத்துத் தகவல்களும் ஆதாரப்பூர்வமான கிரந்தங்களில் இருந்து தொகுத்து எழுதப்பட்டதாகும். இதில் சந்தேகத்திற்கிடமான எந்தத் தகவலும் இல்லை.

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் -  வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள். 

https://bmkmanbayee.blogspot.com/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்