ஹஜ் குறித்து சூஃபிகளின் கருத்து
சூஃபிகளின் ஹஜ் : -22
~•~•~•~•~•~•~•~•~•~•~•~
ஹஜ் குறித்து
சூஃபிகளின் கருத்து :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
சூஃபி முஹம்மது பின் ஃபஸல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் ஏன் இறைவனை தேடி இறையில்லமாம் கஅபாவை நாடிச் செல்கிறார்கள்?
இருந்த இடத்தில் முறையாக இறைவழிபாடுகள் செய்வதின் மூலம் தமக்குள் இறைவனைக் கண்டு கொள்ள மாட்டார்களா?
அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஹஜ்ஜுடைய அமல்களை முறையாக செய்து விட்ட ஒவ்வொருவராலும் அரஃபாவில் அவனை எளிதாக அடைந்து கொள்ள முடியுமே!
எனவே ஹஜ்ஜுடைய அமலை முறையாக செய்ய எவரும் முன்வர மாட்டார்களா?
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஹஜருல் அஸ்வதும் கஅபாவும் கல்தான்! அதனால் எப்பயனும் இல்லை. அதனால் நான் கஅபாவை நாடிச் செல்வதில்லை. அதன் உரிமையாளனையே தேடிச் செல்கிறேன் ஒவ்வொரு வருடமும்....
அபுல்ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ், நபி, ரசூல், ஷைஹு போன்ற வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் தான் நாம் இறைவனைத் தேடி வருகிறோம்.
வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் நாம் இறைவனை அடைந்து கொண்ட தலம் தான் ஹஜ்.
ஆனால் நம்மில் எத்தனை பேர் ஹஜ்ஜில் இறைவனை அடைந்திருக்கிறோம்?
ஹஜ்ஜின் உண்மையான பொருள். மனிதனை தூய்மைப்படுத்துவதும், பெருமை, அகங்காரம் போன்றவற்றை அழிப்பதும், 'நான்' என்ற சுயத்தை அளித்துவிட்டு இறை சிந்தனையிலும் இறை கட்டளைகளை செய்வதிலும் ஒன்றிணைந்து அதன் மூலம் அவனது தெய்வீக ஒளியில் இணைந்திருப்பதுதான் ஹஜ்ஜின் உண்மையான நோக்கம்.
Comments
Post a Comment