ஹஜருல் அஸ்வத் முல்தஜிம்

சூஃபிகளின் ஹஜ் : - 41
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஹஜருல் அஸ்வத்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது அல்லாஹ்வின் கைகளை முத்தமிடுவதற்கு நிகராகும் என ஹதீஸ்களில் காணப்படுகிறது. 

முல்தஜீம், ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத், கஅபா திரை போன்ற ஒவ்வொன்றையும் முத்தமிடுவது, இஷ்கு எனும் பேரின்பத்தின் வெளிப்பாடு என்பதே உண்மை.

முல்தஜீம்:
°°°°°°°°°°°°°°°

முல்தஜிம் மற்றும் கஅபாவின் திரையைப் பிடித்து அழுவது, தன் எஜமானனுக்கு தவறிழைத்த ஒரு பணியாளன் தன் தவறை உணர்ந்து தன் எஜமானனின் ஆடைகளைப் பிடித்து கொண்டு தன்னை மன்னித்து விடும்படி அழுவதைப்போன்றும், அவர் மன்னிக்காமல் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டதால், அவருடைய வீட்டு வாசலையும் வீட்டின் சுற்றுப் பகுதிகளையும் சுற்றி சுற்றி வந்து கட்டி அணைத்து அழுது மன்னிப்பு கேட்பது போன்றும் இருக்கின்றது. 

மேலும் மறுமை நாளில் இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அர்ஷையோ அல்லது அவனையோ பிடித்து அழும் நிலையை ஒத்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும், அவர்களின் தோழர்களும் முல்தஜிம் வாசலை கட்டியணைத்து, முத்தமிட்டு, தம் கன்னங்களை மாறி மாறி அப்பகுதியில் பதித்து, தம் இஷ்கு எனும் பேரன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்