இஹ்ராமில் பரதேசி கோலம்

சூஃபிகளின் ஹஜ் :-  34
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

இஹ்ராமில் பரதேசி கோலம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

இஸ்லாத்தில் துறவறம் இல்லை. ஆனால் பிற மதங்களில் துறவறம் இருக்கின்றது. அது ஓர் உயர்ந்த அமலாகவும் போற்றப்படுகிறது. 

அதனால் ஆயுளில் ஒரு முறை ஹஜ் செய்யும் போது ஐந்து நாட்கள் மட்டும் துறவர கோலம் மேற்கொள்ளலாம் எனும் வகையில் அல்லாஹ் ஹஜ்ஜை கடமையாக்கி இருக்கின்றான். 

இந்த ஹஜ்ஜில் கவர்ச்சிகரமான, வண்ணமயமான பொருட்களையோ, ஆடைகளையோ அணியக்கூடாது; இஹ்ராம் என்ற இரண்டு வெள்ளைத் துணியை மட்டுமே அணிய வேண்டும், மனைவியுடன் சேரக்கூடாது; சாடைமடையாக கூட ஆபாச வார்த்தைகளைப் பேசக்கூடாது என வரையறுத்து, துறவறத்தை வேறொரு வடிவில் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.

இஹ்ராம் எனும் ஆடை லிபாசுத் தக்வா - இறையச்சத்தில் நனைத்தெடுத்த ஓர் ஆடை. இஹ்ராம் அணிந்திருப்போரை பரதேசி கோலத்தில் இறைவன் பார்க்கும் போது அவன் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறான். 

அழுக்கேறிய ஆடைகளோடு தலைவிரி கோலமாக காணப்படும் ஹாஜிகளை பார்த்து இறைவன் தன் வானவர்களிடம், " என் வீட்டை தரிசிக்க நெருங்கி வரும் என் நேசர்களைப் பாருங்கள்; என்னை நோக்கி தலைவிரி கோலமாக புழுதி படிந்த நிலையில் வந்திருக்கிறார்கள்" என்று சொல்லி பெருமிதம் கொள்கிறான்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்