ஹஜ் அமல்களின் அரசன் !

சூஃபிகளின் ஹஜ் : - 26
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


ஹஜ் அமல்களின் அரசன் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=


ஹள்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹஜ் குறித்து கூறிய ஞான உபதேசம் .

அல்லாஹ்வை அஞ்சி சிலர் வணங்குகிறார்கள். இது அடிமைகளின் வணக்கம். இவர்கள் இறைவனின் தண்டனைகளுக்கு அஞ்சியே அமல் செய்கிறார்கள். 

இன்னும் சிலர் அவன் அருட்கொடைகளை எதிர்பார்த்து வணங்குகிறார்கள். இவர்கள் வியாபாரிகள். (வியாபாரிகள் எந்த வேலை செய்தாலும் அதில் லாபத்தை எதிர்பார்த்தே செயல்படுவார்கள்.) 

ஆனால் இறைநேசர்களோ அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே வணங்குவார்கள்.

இறுதிக்கடமையான ஹஜ்ஜை இறைநேசர்கள் போல் அல்லாஹ்வுக்காகவும், நன்றி உணர்வோடும் செய்ய முன்வர வேண்டும்.

*******

இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக  சுஃப்யானுஸ் ஸவ்ரீ  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அரிதாகி வருகிறது. அது எங்கேனும்  கிடைப்பதாக இருந்தால் பிரபல்யமற்று மறைந்து இருப்பதில்தான் கிடைக்கும். 

பிரபல்யமற்று மறைந்திருந்தும், பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கவில்லை என்றால்  தனிமையில்தான் தேடிப் பார்க்க வேண்டும். 

தனிமை தான் பிரபல்யமற்று இருப்பதற்கு ஏற்றமானது.

அங்கும் பாதுகாப்பும், அமைதியும் கிடைக்கவில்லை என்றால் பிறகு மௌனமாக இருப்பதில்தான்  கிடைக்கும். 

ஆனால் மௌனம் தனிமைக்கு சமமானது அல்ல. 

அந்த மௌனத்திலும் அமைதியும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்றால், ஸாலிஹான -  நல்லோர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும். 

தனது நஃப்ஸை தனித்திருக்க வைப்பவனே பாக்கியசாலி  ஆவான்!

ஹஜ்ஜுடைய அமலை முறையாகவும், முழுமையாகவும் செய்தால், இறைவன் தரப்பிலிருந்து பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்