ருக்னுல் எயானியில் துஆ செய்யுங்கள்

சூஃபிகளின் ஹஜ் : - 43
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ருக்னுல் யமானீயில் 
துஆ செய்யுங்கள்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

حدثنا سليمان بن أحمد ، ثنا أحمد بن زيد بن الحريش ، ثنا أبو حاتم السجستاني ، ثنا الأصمعي ، ثنا عبد الرحمن بن أبي الزناد ، عن أبيه ، قال : اجتمع في الحجر مصعب ، وعروة ، وعبد الله بنو الزبير ، وعبد الله بن عمر ، فقالوا : تمنوا . فقال عبد الله بن الزبير : أما أنا فأتمنى الخلافة ، وقال عروة : أما أنا فأتمنى أن يؤخذ عني العلم ، وقال مصعب : أما أنا فأتمنى إمرة العراق والجمع بين عائشة بنت طلحة وسكينة بنت الحسين ، وقال عبد الله بن عمر : أما أنا فأتمنى المغفرة ، قال : فنالوا كلهم ما تمنوا ، ولعل ابن عمر قد غفر له .

அபூ ஸினாத் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்: “ஹிஜ்ர் - ருக்னுல் யமானி எனும் இடத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களின் மூன்று ஆண் மக்களான அப்துல்லாஹ் (ரலி) முஸ்அப் (ரலி) உர்வா (ரலி) ஆகியோரும், அவர்களுடன் உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி ) ஆகிய நான்கு நபர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் மற்ற மூவரை நோக்கி “(ருக்னுல் யமானி ஆகிய) இந்த இடத்தில் நின்று உங்களின் தேவைகளை அல்லாஹ்விடத்தில் எடுத்து கூறுங்கள்!" என்றார்கள். 

அதற்கு, ”நான் கலீஃபாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

”நான் கல்வியில் தேர்ச்சி பெற்று மக்களுக்கு கல்வி போதிக்க ஆசைப்படுகிறேன்” என்று உர்வா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“நான் ஈராக் தேசத்தின் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என முஸ்அப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பை ஆசைப்படுகிறேன்” என்றாகள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ ஸினாத் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

ஜுபைர் (ரலி) அவர்களின் மூன்று ஆண்மக்களும் ஆசைப்பட்டது போலவே அல்லாஹ் அவர்களுக்கு கல்வி, அதிகாரம், அரசியல் தலைமை ஆகியவற்றைக் கொடுத்தான். 

"இன்ஷா அல்லாஹ், இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆசைப்பட்ட மஃபிரத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்" என்று நான் நம்பிக்கை கொள்கிறோம்.                         

நூல்: ஃபவாத்துல் வஃபிய்யாத் , ஹுல்யதுல் அவ்லியா 

சில நேரங்களில் நம் ஆசை உயர்வானதாகவும், உளப்பூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் அதை விரும்புகின்றான். 

எனவே கஅபாவில் இருக்கக்கூடிய நீங்கள் ஒரு முறை ருக்னுல் யமானி மூளையை தொட்டும், முத்தமிட்டும், அதற்கு நேர் எதிரில் அமர்ந்தும் உங்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ்விடத்தில் முன்மொழியுங்கள். 

அதனை ஏற்று விரைவில்  அல்லாஹ் வழிமொழிவான்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்