மதீனா போல் தெரிகிறதே!

சூஃபிகளின் ஹஜ் : - 49
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

மதீனா போல் தெரிகிறதே!
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

இறைநேசர் இப்ராஹீம் பின் முஹம்மது அல் கவாஸ் ( 677-761 ) [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள். 

நான் மதீனாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது கடும் தாகத்தினால் நிம்மதியற்று இருந்தேன். 

தாகத்தின் கடுமையால் நடந்து கொண்டிருக்கும் போது மயக்கமுற்று கீழே விழுந்து விட் டேன். 

சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ ஒருவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பினார். 

நான் எழுந்து பார்த்தபோது மிக அழகான தோற்றத்தில் ஒருவர் வாட்டசாட்டமான  குதிரை மீது அமர்ந்திருந்தார். 

அவர் எனக்குக் குடிக்கத் தண்ணீர் அளித்தார் . பின்னர் "என்னுடன் குதிரை மீது அமர்ந்து கொள்!" என கேட்டுக்கொண்டார்.  

சிறிது நேரத்தில் அவர் என்னிடம் ''இது எந்த ஊர் எனத் தெரிகிறதா?" எனக் கேட்டார். 

அதற்கு நான் "இது மதீனாவாயிற்றே!'' என்றேன். 

உடனே அவர் "இங்கு இறங்கிக் கொள்ளுங்கள்! நீங்கள் நபி (ஸல்) அவர்களின் ரவ்லாவிற்கு செல்லும்போது,  "உங்களின் சகோதரர் கிளுறு (அலை) அவர்களும் தங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்" என எத்திவைத்து விடுங்கள்'' எனக் கூறிச் சென்று விட்டார்கள். 

நூல்: ரவ்ழுர் ரைய்யாஹீன்

யார் எங்கிருந்தாலும் நபி (ஸல்) அவர்களுக்கு வ ஸல்லீமு தஸ்லீமா -  அழகான முறையில் ஸலாம் சொல்லுங்கள்.  

அண்ணலாரின் பதில் நம்மை ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும், குறைவில்லா செல்வத்தோடு குதூகலமாக வாழ வைக்கும். 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் சொல்லுங்கள்.

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் -  வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள். 

https://bmkmanbayee.blogspot.com/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்