மினா முஸ்தலிஃபா
சூஃபிகளின் ஹஜ் : -36
~•~•~•~•~•~•~•~•~•~•~•
மினா & முஜ்தலிஃபா:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
இந்த இரண்டு இடங்களிலும் மக்கள் ஒன்று கூடி இருப்பதைக் குறித்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மக்கள் கூட்டம், அவர்களின் கூச்சல், சப்தம், பல்வேறு மொழிகளை பேசுதல், தம் இமாம்களை பின்பற்றி தம் கூடாரங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியன மறுமை நாளில் மக்கள் தம் நபிமார்களையும், ரசூல்மார்களையும் பின்பற்றி செயல்படுவதை நினைவுபடுத்துகிறது.
மேலும் மறுமை நாளின் திடுக்கத்தின் போது மக்கள் அங்கும் இங்கும் ஓடி அவதியுரும் காட்சிகளையும் மினா, முஸ்தலிஃபா ஆகியன நினைவுபடுத்துகிறது.
மஜ்னூன் தன் காதலியான லைலாவை தேடி அங்குமிங்கும் அலைந்தது போல், ஹஜ்ஜின் போது ஹாஜிகள் ஸஃபா மர்வாவில் ஓடியும், பின்னர் மக்காவிலிருந்து மினாவிற்கு சென்றும், பின்னர் மினாவில் இருந்து அரஃபாவிற்கு சென்றும்,
பின்னர் அரஃபாவில் இருந்து இரவில் முஸ்தலிஃபாவிற்கு வந்தும், பின்னர் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவிற்கு வந்தும், பின்னர் மினாவிலிருந்து பெரிய ஷைத்தானுக்கு மட்டும் கல்லடிக்க சென்றும், கல்லடித்த பின்னர் தவாஃப் செய்வதற்காக மீண்டும் மக்காவிற்கு செல்வதும் என மக்கள் ஓடி திரிவது, மறுமை நாளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment