நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -5

சூஃபிகளின் ஹஜ் :- 31
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

நபிகள் நாயகம் செய்த 
ஹஜ்ஜின் செயல்முறை 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

தொடர் ......5

தவாஃப் ஜியாரா :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நபி (ஸல்) அவர்கள் லுஹர் உடைய நேரத்தில் தவாஃப் ஸியாரவை செய்வதற்காக மக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். வழியிலோ அல்லது ஹரம் ஷரீஃபிலோ அல்லது மீண்டும் மினாவிற்கு வந்த பிறகோ லுஹரைத் தொழுதார்கள்.

மக்கா முகர்ரமாவில் தவாஃபே ஸியாரவை நபி (ஸல்) அவர்கள் முடித்துக் கொண்டு ஸஃபா மர்வாவிற்கு இடையே தொங்கோட்டம் ஓடினார்கள்.

பின்னர் மினாவிற்கு வந்து தமது கூடாரத்தில் தங்கி இருந்தார்கள். மூன்று நாட்களும் பல்வேறு சட்டங்களை பொதுமக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். 

அந்த உபதேசத்தின் போது, "நான் இனி உங்களை சந்திக்காமல் போய்விடக்கூடும்" எனும் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார்கள். 

அந்த மூன்று நாட்களிலும் ஜவால் -  உச்சியில் இருந்து சூரியன் சாய்ந்த பிறகு மூன்று ஷைத்தான்களுக்கும் கல் அடித்தார்கள்.

துல்ஹஜ் பிறை 13 செவ்வாய்க்கிழமை அன்று ஜவாலுக்கு பிறகு ஷைத்தானுக்கு கல் அடித்து முடித்தார்கள்.

மக்கா முகர்ரமாவிற்கு செல்லும் வழியில் மஹஸ்ஸப் - கைஃப் பனீகினானா - பத்ஹா - மஅப்தா - என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்  இடத்தில் கூடாரமடித்து நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள். 

இங்குதான் லுஹரிலிருந்து இஷா வரை அனைத்து நேர தொழுகைகளையும் தொழுதார்கள்.

பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் குடும்பத்தினர் மூன்று வருடங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம், இந்த இடம் தான். 

இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடங்கள் தங்கி இருந்தார்கள். ஆனால் இன்று முடி சூடா மன்னனராக இந்த இடத்தில் தங்கி  இருந்தார்கள். 

ஆயிஷா மஸ்ஜித் உம்ரா :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அப்பொழுதுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நான் உம்ரா செய்யாமலே ஹஜ் செய்து இருக்கிறேன், நான் என்ன செய்வது?" என்று கேட்டதற்கு உம்முடைய சகோதரரை தன்ஈம் அழைத்துச் சென்று, இஹ்ராம் கட்டி வந்து ஒர் உம்ரா செய்யுங்கள்" எனக் கூறினார்கள். 

அவ்வாறே ஆயிஷா அம்மா அவர்கள் ஒரு உம்ராவை செய்து முடித்தார்கள்.

துல்ஹஜ் பிறை 14 அன்று காலை சுபுஹு தொழுகையை ஹரம் ஷரீஃபில் தொழுதுவிட்டு கஅபத்துல்லாவிற்கு உள்ளும் சென்று துஆ செய்த பிறகு மதீனாவை நோக்கி பயணித்தார்கள்.  

துல்ஹஜ் பிறை 18 ஞாயிற்றுக்கிழமை 'கதீர்கம்' என்ற இடத்தில் தங்கி நீண்டதொரு பிரசங்கம் செய்தார்கள். அன்று துல் ஹுலைஃபாவை இரவில் அடைந்தார்கள். அங்கு தங்கியிருந்து விட்டு சுபுஹு தொழுத பிறகு மஃரஸ் என்னும் இடத்தின் வழியாக மதீனாவிற்குள் நுழையும் போது ,

ائِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدٌونَ

நாங்கள் தவ்பா செய்தவர்களாக, உன்னை வணங்கியவர்களாக, எங்கள் படைத்தாள்பனாகிய உன்னை புகழ்ந்தவர்களாக திரும்புகிறோம்" என்னும் துஆவை ஓதிக்கொண்டு மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.

துல் கஅதா பிறை 25-இல் புறப்பட்டு துல்ஹஜ் பிறை 19 இல் மதீனாவிற்குள் நுழைந்து விட்டார்கள். இடைப்பட்ட நாட்கள் 24 நாட்களாகும்.

--------------------------------------------------------------------

அல் அமானத் ஹஜ் சர்வீஸ் மூலம் இன்று ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன்.

ஏற்றுக்கொள்ளப்படவும், எளிமையாக அமையவும் அனைவரும் அகில உலகம் முழுவதிலும் இருந்து வருகிற ஹாஜிகள் அனைவருக்காகவும் துஆ செய்ய வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்