காதலன் காதலியை சந்திப்பது போல் ஹஜ்

சூஃபிகளின் ஹஜ் : -23
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

ஹஜ் மற்றும் உம்ரா 
செய்வோர் கவனத்திற்கு.......

காதலன் காதலியை 
சந்திப்பது போல் ஹஜ்......:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا

ஹஜ் செய்வதற்காக மக்களுக்கு அறிவியுங்கள்; அவர்கள் நடந்து வருவார்கள்.  22: 27

ஹஜ் பயணம் என்பது தன் முழு அன்பையும் வெளிப்படுத்தி காட்டும் ஓர் உன்னத, உயரிய பயணமாகும். ஒரு காதலன் தன் காதலியை சந்திப்பதற்கு எவ்வளவு ஆவலோடும், ஆர்வத்தோடும், ஆசையோடும் பயணிப்பானோ அது போன்று ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 

பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு தன் குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுடைய உள்ளத்தில் எவ்வளவு அன்பும், ஆசையும் இருக்குமோ அவ்வளவு அன்பும் ஆசையும் ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்வோரின் உள்ளத்தில்  இருக்க வேண்டும். 

வெளிநாட்டில் இருந்து குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுக்கு வழியில் ஏற்படுகிற துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் அவன் எந்த வகையிலும் பொருட்படுத்தாமல், குறை சொல்லாமல் பயணிப்பானோ அதுபோல் ஹஜ்ஜுடைய பயணத்தை அவன் மேற்கொள்ள வேண்டும்.

காழி இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். முகைரா பின் ஹகீம் (ரஹ்) இன்னும் இறை நேசர் தமது ஹஜ்ஜை நடந்தே வந்து நிறைவேற்றினார்கள். இதனை அறிந்தவர்களும் கேள்விப்பட்டவர்களும் அந்த இறைநேசரை பாராட்டினார்கள். 

அதற்கு அவர், "தன் எஜமானனை விட்டு ஓடிப்போன ஒர் அடிமை வாகனத்தில்  வந்தா சந்திப்பான்? . நான் மட்டும் தலைகீழாக நடந்து வர சக்தி பெற்றிருந்தால் அவ்வாறே நடந்து வந்து ஹஜ்ஜை முடித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.  

நூல் : துர்ருல் மன்சூர்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்