தொடர் 30. ஞானம் பெறும் வழிகள்

ஞானம் பெறும் வழிகள் 
======================

நேற்றைய தொடர்ச்சி....30

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
===============================

இறைஞானம் - நல்ல விஷயங்களை மன உதிப்பின் (இல்ஹாம்) மூலம்  இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவோர் கீழ்காணும் பத்து விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1.  நாவடக்கம் 
2.  கோல், புறம் பேசாமல் இருத்தல்
3.  தம்மை விட எவரையும் தாழ்ந்தவராக எண்ணாமல் இருத்தல் 
4.  பொய் பேசாதிருத்தல் 
5.  ஹராமான பார்வை பார்க்காமல் இருத்தல் 
6.  தன் செல்வங்களை நல்வழியில் செலவழித்தல் 
7.  அல்லாஹ் தனக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல் 
8.  ஐந்து நேரத் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல் 
9.  பெருமை சுயநலம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றாமல் பாதுகாத்துக் கொள்ளுதல் 
10.  நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளையும், சுன்னத் ஜமாஅத் கொள்கைகளையும் முறையாகப் பேணுதல்.

மேற்கண்ட பத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரர் தான் ஆன்மஞான அறிவை முழுமையாகப் பெற முடியும்.

ஆண்மஞானம் பெறவும், மன அழுக்கை நீக்கி வாழவும், தன்னைத் தேடி வரும் சீடர்களுக்கு சரியான வலியை காட்டுகிற வரும், அவருக்கு நல்லொழுக்கங்களை கற்பித்து அதன்படி அவர் வாழ்கிறாரா என கண்காணிப்பவரும், அவரின் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி உள்ளத்தை இறை நினைவால் நிரப்பி பிரகாசிக்க செய்கிறவரே உண்மையான ஷைஹு ஆவார் என இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்