தொடர் 27. தர்க்க இருளில் இருந்து தஸவ்வுப் ஒளிக்கு.

தர்க்க இருளில் இருந்து 
தஸவ்வுப் ஒளிக்கு
========================

இமாம் ஜீலானியின் மாணவர் ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தீ ரஹ் அவர்கள்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

நேற்றைய தொடர்ச்சி...27

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

•°•°•°•°•°•°

ஷிஹாபுத்தீன்  சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்கள் இளமையாக இருந்த சந்தர்ப்பத்தில் தர்க்கக் கலையில் பெரும் நிபுணராக இருந்தார்கள். 

இவருடைய சிரியா தந்தை நஜ்முதீன் சுஹ்ரவர்த்தி (ரஹ்) அவர்களுக்கு தன் தம்பி மகனுடைய போக்கு அறவே பிடிக்கவில்லை. எவ்வளவோ சொல்லியும் அவர் தர்க்கக் கலையில் இருந்து விலகுவதாக இல்லை.

இந்நிலையில் ஒரு நாள் நஜ்முதீன் சுஹ்ரவர்த்தி (ரஹ்) அவர்கள் தன் தம்பி மகன் ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்களை அழைத்துக் கொண்டு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வருகைக்காக காத்திருந்தபோது தன் தம்பி மகனிடம், "மகனே! நாம் நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளில் ஒருவரிடம் வந்திருக்கின்றோம். 

அவர் பரிசுத்தமான உள்ளத்திற்கு சொந்தக்காரர்; அவருடைய உள்ளம் அல்லாஹ்வின் ஒளியால் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்; அவர்களை காணும் போது ஒழுக்கமாக நடந்து கொள்! இல்லையென்றால் அவரின் மூலமாக கிடைக்கும் அருளை நாம் இழந்து விடுவோம்" என்று கூறினார்.

இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வந்தார்கள்; நஜ்முதீன் சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்கள், "இவர் எனது தம்பி மகன் ஷிஹாபுத்தீன்  ஆவார் ; எந்நேரமும் தர்க்கக் கலையில் மூழ்கி இருக்கின்றார்; அவரை அதில் ஈடுபட வேண்டாம் என எவ்வளவோ தடுத்தும் அதை விட்டும் விலகுவதாக இல்லை; தாங்கள் இவருக்கு ஏதேனும் செய்யுங்கள்" என்று கூறினார்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அவரின் நெஞ்சின் மீது தம் கையை வைத்து தடவி விட்டார்கள்; அவ்வளவுதான்! தர்க்கக் கலை அவர் உள்ளத்தில் இருந்து விலகி, ஆன்மஞான கலை அவர் உள்ளத்தில் பொங்கி எழத்தொடங்கியது.

இதனை புரிந்து கொண்ட ஷிஹாபுத்தீன்  சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 

அவர் அந்த மகிழ்வில் மூழ்கி இருக்கும் பொழுது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "எதிர்காலத்தில் ஈராக் நாட்டின் மிகப்பெரும் இறைநேசர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்" என துஆ செய்தார்கள். ∆

ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்களின் முழுப்பெயர் அபூ ஹஃபீஸ் ஷிஹாபுத்தீன் அஹ்மத் பின் உமர் அஸ் சுஹ்ரவர்தி என்பதாகும்.

இவர்கள் ஈரானில் உள்ள சுஹ்ரவர்த் எனும் பழமையான நகரத்தில் பிறந்தார்கள். 

இவர்கள் சூஃபி ஞானக்கலையை மிகச்சரியாக வடிவமைத்ததால் மிகப்பெரும் சீடர்கள் கூட்டம் இவர்களிடம் இருந்தது. 

இவர்களுடைய போதனையை பின்பற்றி அமல் செய்தவர்கள் 'சுஹ்ரவர்த்தி தரீகா' என அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

தர்க்கக் கலை சார்ந்த அறிவு அறிவல்ல! அது அகங்காரம் எனும் நஞ்சு. உண்மையான அறிவு என்பது வாதத்தில் இல்லை; இறைவனை வணங்குவதில் தான் இருக்கின்றது.

ஒருவரிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என அல்லாஹ் நாடிவிட்டால், ஒரு வினாடியில் ஒருவரின் தொடுதலில் மாற்றம் நிகழ்ந்து விடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

அறிவின் பெருமையில் மூழ்கிய இதயம் அருளின் ஒளியை ஏற்றுக் கொள்ளாது; ஆனால் அருளின் ஒளியை ஒரு முறை இதயம் ஏற்றுக் கொண்டால் அதுவே அறிவின் உண்மையான வடிவமாக மாறிவிடும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்