தர்மத்தில் உள்ள ஆன்மீகம்
தர்மத்தில் உள்ள ஆன்மீகம்
நேற்றைய தொடர்ச்சி....26
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
•°•°•°•°•°
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தொழுகை சென்றிருந்தபோது ஏற்கனவே அறிமுகமாகி இருந்த பெரும் வியாபாரி ஒருவர், "என்னிடம் ஜகாத் அல்லாத ஸதக்கா நிதி மிகப்பெரும் தொகை உள்ளது;
அதை பெறுவதற்கு தகுதியானவர்கள் யாரையும் நான் காணவில்லை; எனவே இதை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளப்படுத்தினால் வழங்கிடுவேன்" என்று கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அந்தத் தொகையை பெறுவதற்கு தகுதியானவர் தகுதி இல்லாதவர் ஆகிய இரு சாராருக்கும் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு பன்மடங்காக திரும்பத் தருவான்;
தர்மம் வழங்குகிற நீங்கள் யாருக்கு வழங்குவது என யோசிக்க வேண்டாம்; உங்களிடமிருந்து பெறுகிறவர்தான் அதை யோசிக்க வேண்டும்; எனவே நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்" எனக் கூறினார்கள். அவ்வாறே அவர் வழங்கினார்.
செல்வந்தர்கள் எவரேனும் தர்மத்தை பெற்றால் நாம் கையை நீட்டி வாங்கி விட்டோமே என்று எண்ணி வருந்துவார்கள்.
அல்லது நாமும் அவரைப் போல் வழங்குவோமே என்ற எண்ணம் ஏற்படும்.
இந்த காரணங்களின் அடிப்படையினாலேயே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அப்படி சொல்லி இருக்கலாம்.
தர்மம் யாருக்கு கொடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல! எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.
அல்லாஹ்விற்காக வழங்கப்படும் ஒவ்வொரு தர்மமும் பெறுபவரின் தகுதியை விட கொடுப்பவரின் தகுதி உயர்ந்துச் செல்கிறது.
தர்மம் செய்கிறவர் பொருள் உதவி செய்யவில்லை; அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்தே வழங்குகிறார்.
தொடரும்...
Comments
Post a Comment