அருள் மழையின் அறிவியல் ரகசியங்கள்


அருள் மழையின் 
அறிவியல் ரகசியங்கள்
=============================


மழை /  தண்ணீர் ماء எனும் சொல் திருக்குர்ஆனில் 63 இடங்களில் இடம்பெற்றுள்ளது. 63 என்பது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தின் அளவை குறிக்கும். 

தண்ணீர் இல்லாமல் எப்படி மனிதன் பூமியில் வாழ இயலாதோ அதுபோலவே நபி ஸல் அவர்களின் போதனைகளை ஏற்காமல் ஒரு மனிதன் பூமியில் மனிதனாக வாழ இயலாது.

غيث
எனும் சொல்லுக்கு மழை என்று பொருள். 
مطر
எனும் சொல்லுக்கும் மழை என்றுதான் பொருள். 

ஆனால் مطر எனும் சொல் தண்டனைகளை கொண்டு வரும் மழை என்றே திருக்குர்ஆன் பொருள் சொல்கிறது. பெரும்பாலும் இந்த வார்த்தை எந்தெந்த சமுதாய மக்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டனவோ அங்கெல்லாம் இந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான். நூஹ் (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் இந்த வார்த்தையவே பயன்படுத்தி இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல், நதி, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாக மாறி மேலே செல்கிறது. 

சின்னச் சின்ன நீர் துளிகள் மேலே செல்லும் பொழுது பல சின்னத் துளிகள் ஒன்றாக இணைந்து மேலே செல்கிறது.

மேலே சென்ற நீர்த்துளிகள் அனைத்தும் ஒரு இடத்தில் ஒன்று சேருகிறது; ஒன்று சேர்ந்து இருக்கிற அந்த நீராவி ஒரு கிலோ எடை அளவு இரண்டு கிலோ எடை அளவு என இருக்கும்.

100 கிராம் எடை அளவு உள்ள நீர் துளிகளால் ஆன சிறிய மேகம் 200 கிராம் எடையுள்ள நீர் துளிகளால் ஆன மேகத்தோடு இணைந்து கொள்ளும். 

அதாவது இரும்பை காந்தம் ஈர்ப்பது போன்று எடை குறைவான மழை மேகத்தை எடை அதிகமான மழை மேகம் ஈர்த்துக் கொள்ளும்.

இப்படி ஈர்க்கப்பட்ட மேகங்கள் கிலோ மீட்டர் கணக்கில் பெரியதாகவும் சிறியதாகவும் பல அடுக்குகளோடும் இருக்கும்.

அதே நேரம் ஒரே மேகமாக திரண்டுள்ள மேகத்தில் நீர் துளிகள் அனைத்தும் கடினமான இறுக்கத்தோடு பிணைந்திருக்கும். 

இறுக்கமாகப் பிணைந்து இருந்தாலும் தனித்தனி ஐஸ் கட்டிகளாக ஒன்றிணைந்து இருக்கும்.

அதாவது தேன்கூட்டில் பல துளைகள் இருக்கும்; அந்தத் துளைகளுக்குள் தேன் இருக்கும்; பல துளைகளையும் இணைக்கின்ற தேன் அடை இருப்பது போன்று தனித்தனி மழை துளிகளை இணைக்கின்ற மழைத்துளியாளான ஓர் கட்டமைப்பும் இருக்கும். 

இவ்வாறு மேகம் அடர்த்தியாக அதிக கனத்தோடு இருக்கும் சந்தர்ப்பத்தில் அதன் மீது காற்று வீசும் பொழுது அந்த மலைமேகம் சிதறி அத்திங்கட்டி, ஆலங்கட்டி ஐஸ் கட்டிகளாக  விழுகின்றன.

அவை கீழே இறங்க இறங்க, காற்றின் வேகம் மற்றும் வெப்ப காற்று ஆகியன பனிக்கட்டியை உருகச் செய்கிறது; உருகிய பெரும் மழைத்துளி காற்றுகளால் சிதைக்கப்பட்டு பல சிறு துளிகளாக பூமியில் வந்து விழுகின்றது. 

அதேநேரம்  கடினமான எடையோடு கூடிய மழைத்துளிகள் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாக பூமியில் வந்து விழுகின்றது.

மழை மேகங்கள் பூமியிலிருந்து 25 ஆயிரம் அடி முதல் 30 ஆயிரம் அடிகளுக்கு மேலாக இருக்கின்றன. அதாவது சுமார்  எட்டரை கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மழைமேகங்கள் மலையை போன்று பெரியதாக இருக்கின்றன. 

வடகிழக்கு பருவமழை என்பது பங்களாதேஷ், உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி, அசாம், மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி, ஒடிசா ஒடிஷா மியான்மர் ஆகிய நிலப்பரப்பில் ஆவியான ஆவியான ஈரப்பதத்துடன் கூடிய காற்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வீசும் பொழுது மழை பொழிகிறது இதையே வடகிழக்கு பருவமழை என்று சொல்லுகிறார்கள். 

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் பொழிகிறது.

தென்மேற்கு பருவ காற்று, தென்மேற்கு பருவ மழை என்பது அரபிக்கடல் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கடல் வழியாக கேரளா, கர்நாடகா, கான்பூர், மேற்கு வங்கம் வழியாக தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்திற்குள் வந்து கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும். தென்மேற்கு பருவக்காற்றினால் தமிழகத்திற்கு போதுமான மழை கிடைக்காது. குறைவாகத்தான் மழை பொழியும். கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் அறவே மழை இருக்காது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பொழியும்.

தென்மேற்கு பருவ மழை என்பது அரபிக்கடல் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கடல் வழியாக கேரளா, கர்நாடகா, கான்பூர், மேற்கு வங்கம் வழியாக தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்திற்குள் வந்து கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும். 

தென்மேற்கு பருவக் காற்றினால் தமிழகத்திற்கு போதுமான மழை கிடைக்காது. குறைவாகத்தான் மழை பொழியும். கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் அறவே மழை இருக்காது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பொழியும்.

பங்களாதேஷ், உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி, அசாம், மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி, ஒடிசா ஒடிஷா மியான்மர் ஆகிய நிலப்பரப்பில் ஆவியான ஆவியான ஈரப்பதத்துடன் கூடிய காற்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வீசும் பொழுது மழை பொழிகிறது இதையே வடகிழக்கு பருவமழை என்று சொல்லுகிறார்கள். 

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் பொழிகிறது.

عن أنسٍ رضي الله عنه قال: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا نَزَلَ الْمَطَرُ حَسَرَ ثَوْبَهُ حَتَّى يُصِيبَهُ مِنْهُ، فَقِيلَ لَهُ: لِمَ؟ فَقَالَ: لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; மழை பொழியும் பொழுது நபி (ஸல்) அவர்கள் வெட்ட வெளிக்கு வந்து தன் ஆடைகளை சுருட்டிக் கொண்டு மழை, தன் மீது விழும் வண்ணம்  நின்றார்கள்; "நீங்கள் ஏன் இவ்வாறு நிற்கிறீர்கள்" என்று கேட்கப்பட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக இந்த மழைத்துளி புதியது; இது அல்லாஹ்விடமிருந்து நம்மிடம் வருகிறது" என்று கூறினார்கள். 

நூல்: அபூதாவூத்

قال النبي ﷺ: "اثنتان ما تردان: الدعاء عند النداء، وتحت المطر

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“இரண்டு சந்தர்ப்பங்களில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படாது; 

1.  பாங்கு சொல்லப்பட்ட பிறகு கேட்கப்படும் துஆ 

2.  மழை பொழியும் பொழுது கேட்கப்படும் துஆ 

நூல் : அபூதாவூத்  2540

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஏமன் நகரத்தில் வாழ்ந்து வந்த போது அங்கே கடுமையான வரட்சியும் பஞ்சமும் நிலவியது. 

அச்சமயம் மக்களில் சிலர், "அபூ அப்துர் ரஹ்மானே! எங்கள் நிலம் வறட்சியில் நிலவுகிறது; ஆடு மாடுகள் தாகத்தால் தத்தளிக்கிறது; குழந்தைகள் பாலுக்காக அழுத வண்ணம் இருக்கின்றனர்; மழை இல்லை; தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் எங்களின் பிரச்சனை தீரும்" என்று கூறினார்கள். 

உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் " பாவமன்னிப்பை அல்லாஹ்விடமிருந்து பெருகிறவர்களால் மட்டுமே மழையையும் பெற முடியும் ;

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا، يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا،نَ

உங்களைப் படைத்தாள்பவனிடம் நீங்கள் பாவமன்னிப்பு கேளுங்கள்; நிச்சயமாக அவன் அதிகம் மன்னிப்பவனாக இருக்கின்றான். தொடராக உங்களுக்கு மழை பொழிவிப்பான் (71:10–12) எனவே அனைவரும் பள்ளிவாசலுக்கு வாருங்கள் அனைவரும் கூட்டாக இஸ்திஃபார் செய்வோம் என அழைத்தார்கள். 

அவ்வாறே மிகப் பெரும் கூட்டம் அங்கே ஒன்று சேர்ந்தது; வருகைத் தந்திருந்த அனைவரையும்
 
أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ

என் இறைவா அனைத்து பாவங்களிலிருந்தும் நான் மன்னிப்பு கேட்டு மனம் திரும்புகிறேன்" என்று சொல்லச் சொன்னார்கள்; சிறிது நேரம் அனைவரும் திக்ரு செய்தார்கள். 

பின்னர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் துஆ செய்யத் தொடங்கினார்கள் அந்த துஆவின் இடையே
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، هَنِيئًا مَرِيئًا، مَرِيعًا غَدَقًا، عَاجِلًا غَيْرَ رَائِثٍ
என ஓதும் பொழுது மழைத்துளி மண்ணில் விழுந்தது; மக்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழங்கினார்கள். பின்னர் தூஆ நிறைவு பெற்றது. அந்த துஆவைக் கொண்டு ஆறுகள் குளங்கள் ஏரிகள் நிரம்பின. அனைவரும் நனைந்த வண்ணம் பள்ளியிலிருந்து வெளியேறினார்கள்.

மழை பொழியும்போது ஓதும் துஆ:
========

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

இறைவா! பயனுள்ள மழையாய் இதை ஆக்கி அருள்வாயாக!

நூல்: புகாரி 1032, முஸ்லிம் 897

மழை நின்றபின் ஓதப்படும் துஆ:
==========

مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ

நாம் அல்லாஹ்வின் அனுக்ரஹம் மற்றும் கருணை மூலமாகவே மழையைப் பெற்றோம்.

நூல்: புகாரி 846, முஸ்லிம் 71

மழை மிகவும் பலமாகப் பெய்யும் போது ஓதும் துஆ: 
=============

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

இறைவா! மழையை எங்கள் மீது மட்டுமின்றி, எங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  பொழியச் செய்வானாக! மலைகளிலும், சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், மரங்கள் வளரும் இடங்களிலும் பயனுள்ள மழையை பொழியச் செய்வானாக!

நூல்: புகாரி  1014, முஸ்லிம் 897

மழை பெய்யும்போது ஓத வேண்டிய சிறப்பு துஆ :
===========

اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَارْزُقْنِي، وَأَصْلِحْ شَأْنِي كُلَّهُ

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் செய்வாயாக! எனக்கு  வாழ்வாதாரம் அளித்து, என் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கச் செய்வாயாக!

இடி மற்றும் மின்னலின் போது ஓதும் துஆ:
=============

 سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

இடியும் அவனை புகழ்ந்து தூய்மைப் படுத்துகின்றது; வானவர்கள் அவன் மீதுள்ள பயத்தின் காரணமாக அல்லாஹ்வை புகழ்கின்றனர்.

புயல் / கடும் காற்று அடிக்கும் நேரத்தில் ஓதும் துஆ: 
=========

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

இயற்கை பேரிடர்களின் போது பொதுவாக ஓதும் துஆ : 
==========

حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

தலைப்பு : 

• மழை - உயிர்களை இணைக்கும் அருள்தூதர்

Rain — The Messenger of Mercy Connecting All Lives

المطر — رسول الرحمة الذي يوحّد الأرواح 

• மழைத்துளிகளில் மறைந்திருக்கும் இறையருள்

The Divine Mercy Hidden in Raindrops

الرحمة الإلهية المختبئة في قطرات المطر

• அருள் மழையின் அறிவியல் ரகசியங்கள்

The Scientific Secrets of the Rain of Mercy

الأسرار العلمية لمطر الرحمة

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்