மன்பயீ ஆலிம்களை அழைக்கிறது தாய் கல்லூரி

மன்பயீ ஆலிம்களை 
அழைக்கிறது தாய் கல்லூரி
===============================

165 வருடங்களாக கல்வி எனும் ஒளியின் பிறவாகமாக இயங்கி வருகிறது லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி.

இந்தக் கல்லூரியில் படித்து வெளிவந்த ஆலிம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் சிறப்பான சேவையை செய்து வருகிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் தாய் கல்லூரிக்கு அவர்களை அழைத்து, இறைப்பணியை தொய்வின்றி செய்ய நஸியத் - ஆன்மீக போதனைகள் வழங்குவது வழக்கம். 

அவ்வாறான சங்கம நிகழ்வு 23/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று லால்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலிம்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும். 

எங்கள் தலைமை ஆசிரியர் அவர்கள், "மன்பயீ ஆலிம்கள் விசேஷமானவர்கள்; அவர்கள் பணி செய்கிற மஹல்லாவை அல்லது கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். 

அதாவது அந்த ஊரில் உள்ள  சிறுவர்களுக்கு முறையான, சரியான மார்க்கக் கல்வியை வழங்குவதோடு அந்த ஊரில் உள்ள முதியோர்களுக்கும் பெண்களுக்கும் முறையான மார்க்கக் கல்வியை வழங்கி சில ஆண்டுகளிலேயே அவர்களை மார்க்கத்தில் முழுமையாக நுழைத்து விடுவார்கள்; அந்த ஆற்றல் நமது ஆலிம்களுக்கு உண்டு. அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடும், இக்லாசோடும் செயல்படுவார்கள்" என்று கூறுவார்கள். 

ஈஸால் ஸவாப் நிகழ்ச்சி:
========================

22/ 12 / 2025 மாலை தார தஃப்ஸீர் ஹாலில் ஊர் பொதுமக்களும் மதரஸா மாணவர்களும் இணைந்து இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்காகவும் அவர்களிடமிருந்து நம் வரை ஹதீஸ் நூலை கொண்டு வந்து சேர்த்த அனைவருக்காகவும், லால்பேட்டை மதரஸாவில் புகாரி ஷரீஃப் ஓதிக்கொடுத்து வந்த மர்ஹூம் ஆலிம்களுக்காகவும், ஊர் பொதுமக்களின் நன்மைக்காகவும் குர்ஆன் ஓதி ஈஸால் ஸவாப் செய்யப்படும்.

அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு லால்பேட்டையில் உள்ள பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெறும்.

மீண்டும் ஒரு ஈஸால் ஸவாப் நிகழ்ச்சி 
====================================

23/12/2025 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு நமது மதரஸாவின் காலம் சென்ற முன்னாள் பேராசிரியர்கள், நிர்வாகிகள், மதரஸாவின் வளர்ச்சிக்காக உதவியவர்கள், மதரஸாவின் ஊழியர்கள், லால்பேட்டை பொதுமக்கள், மன்பயீ ஆலிம்கள்  அனைவருக்காகவும் 
காலை 6 : 00 மணி முதல் 8:00 மணி வரை குர்ஆன் ஷரீஃப் ஓதுவது, நினைவேந்தல் சொற்பொழிவு உட்பட ஈஸால் ஸவாப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மன்பயீ பேரவை சங்கம நிகழ்வின் துஆ மஜ்லிஸில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். அதன் பரகத் -  பேரருளைப் பெறவே நாம் ஒன்று கூடுகிறோம். 

இந்த நிகழ்வில் சிலர் உரையாற்றுகிறார்கள் இந்த நிகழ்வு குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மன்பயீ பேரவையின் நிகழ்ச்சிகள்
================================

காலை 8:30 முதல் 9:30 மணி வரை  குளிக்கவும் பசியாறவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

9:30 மணி முதல் நண்பகல் 1:30 மணி வரை மன்பயீ பேரவையின் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சி விரிவாக வடிவமைக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

லால்பேட்டை மதரஸாவின் முன்னாள் பேராசிரியர்கள், பாசத்திற்குரிய உஸ்தாதுகள், லால்பேட்டை மக்களின் உயர்ந்த சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்து 

آثار العلماء منبع الأنوار

மன்பவுல் அன்வார்
ஆலிம்களின் அடிச்சுவடுகள் எனும் பெயரில் மன்பயீ பேரவை வெளியிடுகிறது.

புகாரி ஷரீஃப் வாசிப்பு 
ஐம்பதாவது பொன்விழா நிகழ்ச்சி 
=================================

மன்பயீ பேரவை கூட்டம் நடைபெறும் அதே நாளில் புகாரி ஷரீஃப் வாசிப்பு நிகழ்ச்சி 50வது பொன்விழா ஆண்டை அடைந்திருக்கிறது.

அன்று அஸர் தொழுகையில் இருந்து இரவு 9: 30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. 

அந்த நிகழ்ச்சியில் புகாரி ஷரீஃப் பொன்விழா மலர் வெளியிடப்பட உள்ளது.

மன்பயீ பேரவை நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் ஆலிம்கள் அனைவரும் புகாரி ஷரீஃப் உடைய மஜ்லிஸிலும், நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதிவரை இருக்க வேண்டும். 

புகாரி மஜ்லிஸ் நிறைவு துஆவில் அனைவரும் பங்கெடுத்து அதன் பரக்கத்தை பெற்றுச் செல்ல வேண்டும்; இடையில் எவரும் சென்று விடாமல் இறுதிவரை இருக்க வேண்டும்.

எனவே தற்போது தோராயமாக வடிவமைக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டுமானால் ஆங்காங்கே இருந்து புறப்படுகின்ற மன்பயீ சொந்தங்கள் அனைவரும் விடியற்காலை நான்கு மணிக்குள் லால்பேட்டை நகரத்திற்குள் வந்து விட வேண்டும் என ஷைகுல் ஜாமிஆ ஹள்ரத் அவர்கள் சென்னையில் நடந்த பேரவை கூட்டத்திலும், நேற்று லால்பேட்டையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திலும் கூறினார்கள்.

அனைவரும் வருக !
அறிவமுதம் பருக  !!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்