தொடர் 21. குளிர் காலத்தில் வேர்வை
குளிர் காலத்தில் வேர்வை:
நேற்றைய தொடர்ச்சி....21
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
அபூ முஹம்மது அஃபாஸ் என்பவர் கூறுகிறார். நான் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் குளிர்காலத்தின் நடுவில் ஒரு முறை சென்றிருந்தேன். அச்சமயம் கடும் குளிர் காலமாக இருந்தது. அந்தக் குளிரை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை.
இந்நிலையில் அண்ணார் ஒரு முழுகை கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள். இதனால் அவர்களின் தலையில் உடல் சூட்டின் காரணமாக ஆவி பறந்தது. வேர்வை அவர்களது உடலிருந்து வேர்ந்துக் கொண்டே இருந்தது.
அந்தக் கடும் குளிர் காலத்தில் அவர்களை நெருங்கி அமர்ந்திருப்பவர்கள் தம் கைகளில் விசிரியை வைத்துக் கொண்டு தமக்குத் தாமே விசிரிக் கொள்ளும் அளவிற்கு வெப்பக்காற்று அண்ணாரின் உடலிலிருந்து வெளிவரும்.
இது அல்லாஹ் அவர்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
நூல் அஃலாமுல் முஸ்லிமீன்
உருவ அமைப்பு
================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மெலிந்த உடல், உயரமான தோற்றம், அகன்ற மார்பகம், நீண்ட தாடி, ஒளிரும் கண்கள், இரு புருவங்களும் வில்லுப்போல் சேர்ந்திருக்கும், பெரிய குரல் ஆகிய அழகிய உருவ அமைப்பில் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
Comments
Post a Comment