தொடர் 19. கல்விக் கூடத்தில் ஒரு காட்சி:

கல்விக் கூடத்தில் ஒரு காட்சி:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

நேற்றைய தொடர்ச்சி....19

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பக்தாதில் "பாபுல் அஸ்ஜ்" எனும் கலாச்சாலையில் நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கல்வி கற்பிதார்கள். இதன் பயனாக ஆண்டுக்கு சுமார் மூன்றாயிரம் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டுமுரீதும் பெற்று வெளியேறுவார்கள். 

அப்படி பார்க்கப்போனால் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னாரிடம் கல்வி பயின்றும் முரீதும் பெற்றும் இருக்கிறார்கள் என தெரிய வருகிறது. 

இம்மாணவர்கள் உலகம் முழுதும் பறவிச் சென்று மார்க்கத்தை பரப்பினார்கள். அண்ணாருக்கு அளிக்கப்பட்ட அடைமொழி பெயரான முஹ்யித்தீன் - மார்க்கத்தை உயிர்பித்தல் எனும் சொல் நூறு சதவிகிதம் உண்மையானது.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர் 

போதிப்பதில் பொறுமை 
========================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை தேடிவரும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக  அவர்கள் எதிர்பார்த்த துறைச்சார்ந்த கல்வியை போதித்து தருவார்கள். தம் தெளிவான உரையின் மூலம் மானவர்களை விளங்கச் செய்வார்கள். 

அவர்களில் பலர் உடனே பாடத்தை விளங்கிக் கொள்வார்கள்; சிலர் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட இரண்டாம் தரமானவர்கள் மீது கோபப்படாமல் மெண்மையாக பல முறை சொல்லித் தருவார்கள். 

இவர்களில் சிலர் எப்படி சொல்லிக் கொடுத்தாலும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஷைகு அஹமது பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் 'உபை' என்ற மாணவர் இருந்தார். அவரிடம் எத்தனைமுறை விவரித்து பாடங்களை சொல்லிக் கொடுத்தாலும் விளங்கிக் கொள்ள மாட்டார். அவருக்கும் கல்விக்கும் மிக நீண்ட இடைவெளி இருந்தது. 

ஆனாலும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அந்த மாணவர் பாடத்தை விளங்கும் வரை பொறுமையாக சொல்லிக் கொடுத்து அவரையும் விளங்கச் செய்வார்கள்.

இந்நிலையில் ஒருநாள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை சந்திக்க இப்னு சம்ஹல் (ரஹ்) என்பவர் வந்திருந்தார். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் பொறுமையை கண்டு ஆச்சரியமடைந்தார். 

அங்கிருந்த 'உபை' பாடங்களைப் படித்து விட்டு எழுந்து சென்றதும் இப்னு சம்ஹல் (ரஹ்) அவர்கள், "இந்த நபருக்கும் நீங்கள் கற்பிப்பதை கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன்" என்று கூறினார்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், அவருக்கு இன்னும் ஒரு வார காலம் தான் இருக்கிறது; பிறகு அவர் இறைவனிடம் சென்று விடுவார் - மரணித்து விடுவார்" என்றார்கள். 

இப்னு சம்ஹல் (ரஹ்) அவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் கூற்றை கேட்டு வியப்படைந்தார்கள். அது மட்டுமல்லாமல் அந்நாட்களை எண்ணிக் கொண்டே வந்து இறுதி நாளன்று ஜனாஸா தொழுவதற்காக நம்பிக்கையோடு வந்தார்கள். அவரின் ஜனாஸாவை கண்டு அதிசயித்தார்கள். பிறகு ஜனாஸா தொழுது விட்டு இல்லம் திரும்பினார்.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர்

நபி (ஸல்) அவர்கள் கூட தம் மகள் பாத்திமாவின் மரண செய்தியையும், ஒரு யுத்தத்தில் மூன்று தளபதிகளின் மரண செய்தியையும் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபிமார்கள், ஸஹாபாக்கள் ஆகியவர்கள் எந்த வகையான அற்புதங்கள் -  முஃஜிஸாத் -  கராமத்துகளை செய்தார்களோ அதுவும் அது அல்லாத மற்றவைகளும் வலிமார்கள், ஸாலிஹீன்கள் கராமத்தாக செய்ய ஆற்றல் பெற்றவர்கள் என்பது சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையாகும்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்