மீலாது சமய நல்லிணக்க விழா

மீலாது சமய நல்லிணக்க விழா 
==============================

அபூ உஸைத் (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டிலிருந்து முஸ்லிமல்லாத சில கைதிகளை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். 

நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அந்தக் கைதிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது ஒரு கைதிப் பெண்மணி அழுது கொண்டிருந்தாள். 

'நீ ஏன் அழுகிறாய்?' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'என் மகன் கூஃபா நகரில் பனூ அப்ஸ் குலத்தாரிடம் விற்கப்பட்டு விட்டான்' என்று கூறினாள். 

உடனே நபி (ஸல்) அவர்கள் அபூ உஸைத் (ரலி) அவர்களிடம் 'நீங்கள் பஹ்ரைன் சென்று பனூ அப்ஸ் கோத்திரத்தார் வசிக்கும் பகுதிக்குச்  சென்று அந்தச் சிறுவனை அழைத்து வாருங்கள்' என்று கூறினார்கள். 

உடனே அபூ உஸைத் (ரலி) அவர்கள் அங்கே சென்று அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள். 

நூல் : ஹாகிம்

நபி (ஸல்) அவர்கள் சகோதர சமயத்தைச் சேர்ந்த ஒரு பெண் கைதி மீது இரக்கப்பட்டு, அவரின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவரின் பிள்ளையை அழைத்துவர  தூரமான நாட்டிற்கு தன் தோழரை அனுப்பி வைத்தார்கள். 

சகோதர சமயத்தைச் சேர்ந்த பெண் கைதி அளவில்லா ஆனந்தம் அடைந்தார்;  இது போன்ற வரலாற்றை உலகம் கண்டதுண்டா?

"கைதியாக உள்ள தாயையும் பிள்ளையையும் பிரிக்கிறவர்கள் மறுமை நாளில் தனக்கு பிரியமானவற்றை விட்டும் பிரிக்கப்படுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல் : திர்மிதீ

சாதி மதம், இனம் மொழி என எதையும் பாராமல் மனிதத்தை மட்டுமே பார்த்து வாழ்வியலை அமைத்துக் கொள்ள வழிவகை செய்துள்ள மார்க்கம் இஸ்லாம்.

பெரிய வடகரை கிராமத்தில் நடைபெறும் 1500 ஆவது மீலாது சமய நல்லிணக்க விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்