நீங்கள் எத்தனை முறை லப்பைக் சொன்னீரோ அத்தனை முறை ஹஜ் உம்ரா செய்யும் வாய்ப்பு உண்டு
சூஃபிகளின் ஹஜ் :- 20
~•~•~•~•~•~•~•~•~•~•~•~
நீங்கள் எத்தனை முறை லப்பைக் சொன்னீரோ அத்தனை முறை உங்களுக்கு ஹஜ் உம்ரா செய்யும் வாய்ப்பு உண்டு :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
"ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்" (என்று நாம் கூறினோம்.)
22:27
இறைவன் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுக்கச் சொன்னதும் இப்ராஹிம் (அலை) அவர்கள், "இறைவா! எனது சப்தம் அனைத்து மக்களையும் எப்படி சென்றடையும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு இறைவன், "உமது அழைப்பை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது என் கடமை" எனக் கூறினான்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அறிவிப்பு செய்ததும் அந்த அறிவிப்பை வானம் பூமியில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் இன்னும் பிற வஸ்துகளும் கூட கேட்டன.
இப்ராகிம் (அலை) அவர்களின் அழைப்பை செவியேற்ற அனைவரும் 'லப்பைக்' எனக் கூறினார்கள்.
யாருக்கு ஹஜ்ஜை அல்லாஹ் நசீபாக்கினானோ அவர்கள் இந்த அழைப்பிற்கு 'லப்பைக்' என பதில் கூறினார்கள்.
இந்த அழைப்பை கேட்டு ஒரு முறை 'லப்பைக்' எனக் கூறியவர் ஒரு முறையும், இரண்டு முறை 'லப்பைக்' எனக் கூறியவர் இரண்டு முறையும், அளவின்றி லப்பைக், லப்பைக் என சொல்லிக் கொண்டே இருந்தவருக்கு பல ஹஜ், உம்ரா செய்கின்ற பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
அந்த வகையில் நாம் எத்தனை ஹஜ் , உம்ரா செய்து இருக்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு நாம் அத்தனை முறை ஆலமுல் அர்வாஹில் இருக்கும்போது 'லப்பைக்' சொல்லி இருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
நூல்: துர்ருல் மன்சூர், அல் இத்திஹாஃப்.
ஹஜ் வசனங்களின் விளக்கம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மர்யம் (அலை) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றிருக்கும் போது பேசக்கூடாது என்றும் சட்டம் இருந்தது. அந்த நடைமுறையை அல்லாஹ் நம் சமுதாயத்தினரில் ஹஜ்ஜுடைய அமலின் போது கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.
ولا جدال في الحج
ஹஜ்ஜின் போது வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. 2 197
اليوم اكملت لكم دينكم
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமை பெறச் செய்து விட்டேன் 5:4
இஸ்லாத்தின் கடமைகளின் வரிசை, ஹஜ்ஜில் முடிவடைகிறது. இஸ்லாம் மார்க்கம் இத்துடன் முற்றுப் பெறுகிறது.
இவற்றை வலு சேர்க்கும் விதமாக இறைவன் மேற்கண்ட வசனத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் இன்றோடு முடிவுற்று விட்டது என்று சொல்லிக் காட்டுகிறான்.
இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்றதாக அறிவித்த நாளை, உலக முஸ்லிம்கள் அனைவரும் அதே நாளில், அதே இடத்தில் ஒன்றுகூடி இன்றும் கொண்டாடி வருகிறார்கள். அதுதான் அரஃபா உடைய நாள்.
B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் - வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள்.
https://bmkmanbayee.blogspot.com/
Comments
Post a Comment