அணுகுண்டு மௌலானா - அனல் பறக்கும் பேச்சாளர் மறைவு

அணுகுண்டு மௌலானா - 
அனல் பறக்கும் பேச்சாளர் மறைவு : 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரியில் முதல் ஜும்ரா ஓதிக் கொண்டிருக்கும்போது அணுகுண்டு மௌலானா அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

மர்ஹூம் சுல்தான் ஹள்ரத் அவர்கள், பிள்ளைகளுக்கு நசியத் செய்யும் படி கூறினார்கள்.

அன்று ஹள்ரத் அவர்கள் சொன்ன உபதேசம் இன்றும் நினைவில் இருக்கிறது.

"குர்ஆனை திறந்து அதிகமாக ஓத வேண்டும். அதற்காக தான் அல்லாஹ் முதல் சூராவிற்கு ஃபாத்திஹா -  'திறக்குதல்' என பெயர் சூட்டியிருக்கிறான்.

நாம் ஜஹாலத் - அறியாமையில்  இருக்கின்றோம். அதனால்தான் இரண்டாவது சூராவிற்கு பகரா -  காளை கன்று என அல்லாஹ் பெயர் சூட்டி இருக்கின்றான். 

ஆடு மாடுகளைப் போன்று இருக்கின்ற நாம் திருக்குர்ஆனை தொடர்ந்து வாசித்து வந்தால், மிக உயர்ந்த நிலையை அடைந்து மனிதனாக ஆகிவிடலாம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக எல்லாம் வல்ல இறைவன் இறுதி சூராவிற்கு 'நாஸ்' - மனிதன் என பெயர் வைத்திருக்கின்றான்.

அறியாமையில் இருக்கும் மனிதன் அறிவாளியாக ஆகிவிடலாம் என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது எனவே அதிகமாக குர்ஆன் ஓதி வாருங்கள்" என்று கூறினார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நாங்கள்  இருவரும் சேர்ந்து பலமுறை உரையாற்றி இருக்கின்றோம். 

அப்பொழுதெல்லாம் ஹள்ரத் அவர்கள் " மக்களுக்கு நல்ல செய்தியை சொன்னீர்கள்" என்று முதுகில் தட்டி கொடுப்பார்கள்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆத்தூர் மாவட்டங்களின் முன்னாள் மாபெரும் பேச்சாளர் அவர்கள் தாம். 

இவர்கள் இல்லாத திருக்குர்ஆன் மாநாடு இல்லை. மீலாது விழாக்கள் இல்லை. மக்தப் ஆண்டு விழாக்கள் இல்லை. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இவர்களின் தேதியை வாங்கிக் கொண்டுதான் திறப்பு விழாக்களே நடைபெறும்.

ஹள்ரத் அவர்கள் பேசத் தொடங்கி விட்டால் இடையில்  எவரையும் பேச விட மாட்டார்கள். 

பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையே கேள்வி கேட்பார்கள். மக்கள் பதில் சொல்லுவார்கள். 

குண்டு வெடித்தால் எப்படி சத்தம் மிகப்பெரிய அளவில் இருக்குமோ அதுபோல், அவர்களின் குரல் கணீர் என இருக்கும். அதனாலேயே அவர்களுக்கு மக்கள் "அணுகுண்டு மௌலானா" என அடைமொழி சூட்டினார்கள்.

ஆதாரங்களோடும் அறிவார்ந்த முறையிலும் அவர்களின் சொற்பொழிவு அமைந்திருக்கும்.

94 வயதில் காலமான ஹள்ரத் அவர்களுக்கு  எல்லாம் வல்ல இறைவன் , தான் விரும்பிய சொர்க்கத்தை அவர்களுக்கு வழங்கி கண்ணியப்படுத்துவானாக!" ஆமீன்!!

ஹள்ரத் அவர்கள் காலமெல்லாம் மக்களிடம் வர்ணித்ததை சொர்க்கத்தை விட சிறந்த சொர்க்கத்தை எல்லாம் வல்ல இறைவன் வழங்கிடுவானாக!

அவரின் குடும்பத்தினருக்கு  அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கிடுவானாக! ஆமீன்!!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்