ஹாஜிகளுக்கான பரக்கத்
சூஃபிகளின் ஹஜ் :- 12
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
ஹாஜிகளுக்கான பரக்கத் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஹஜ் மற்றும் உம்ரா செய்தவர்களை அல்லாஹ் ஏழையாக்குவதில்லை என நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஒருவர் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு, பத்து லட்ச ரூபாய்காண பணிகளை தமக்காக செய்து கொண்டால் அது பரக்கத் ஆகும்.
ஒருவர் பத்து லட்சம் ரூபாய் வைத்துக் கொண்டு, ஒரு காரியத்தை செய்து இறுதியில் அதனால் எந்த பயனும் இல்லாமல் போனால் அதில் பரக்கத் இல்லை என்று பொருள் ஆகும்.
ஒருவரிடம் இருந்த ஒரு தீனாரின் பரக்கத்தைப் பாருங்கள்.
அல்லாமா அபூ அம்ரு துஜாஜி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் ஹஜ்ஜு செய்யும் எண்ணத்துடன் இருந்தபோது ஒரு சமயம் இறைநேசர் ஜுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்களிடம் சென்றிருந்தேன்.
என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் எனக்கு ஒரு திர்ஹம் நாணயத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நான் அதை என் இடுப்பு பெல்டில் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
இதற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்காக சென்ற வழிகளில் எல்லாம் எனக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பிறர் தாமாகவே முன்வந்து மனமுவந்து செய்தார்கள். எனது தேவைகள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டிருந்தது.
அதே நிலையில் நான் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பி வந்தும் விட்டேன். பின்னர் இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்களிடம் சென்றேன்.
இறைநேசர் அவர்கள் தமது கையை நீட்டி, "எனது திர்ஹமை எனக்கே திருப்பி கொடுத்து விடுங்கள்" என்றார்கள்.
நான் அந்த திர்ஹத்தை எடுத்து கொடுத்துவிட்டேன்.
பிறகு அவர்கள் "இந்த நாணயம் உங்களுக்கு எவ்வாறு பயன் மிக்கதாக இருந்தது என்பதை உணர்ந்தீர்களா?" என்று கேட்டார்கள்.
"மிக நன்றாக, பயன்மிக்கதாக இருந்தது!'' என்று நான் பதிலளித்தேன்.
நூல்: அல் இத்கான், துர்ருல் மன்சூர்
Comments
Post a Comment