ஹஜ் எதற்கு செய்கிறார்கள்?

சூஃபிகளின் ஹஜ் : - 21
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஹஜ் எதற்கு செய்கிறார்கள்?
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

"ஒரு மனிதன் செய்த பாவங்கள் அவன் செய்த  ஹஜ்ஜின்  காரணமாக அழிக்கப்படுகிறது"  என நாம் நம்புகிறோம்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் அவன் செய்த பாவங்கள்  அழிக்கப்படுவதற்கு தான் ஹஜ் மேற்கொள்ளப்படுகிறதா? என்றால் இங்கே சில கேள்விகள் எழுகிறது. 

பாவங்கள் செய்த வசதியானவர்கள் ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்துக் கொள்வார்கள். வசதி இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்?

மேலும் ஒரு மனிதனின் பாவங்கள் அழிக்கப்படுவதற்கு ஒரு மனிதனின் நிதி நிலையும் காரணமாக இருக்கிறது என தெரிய வருகிறது. இது எப்படி சமத்துவமாக ஆகும்? 

செல்வந்தர்கள் உடனே ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்து விடுவார்கள். ஏழைகள் தம் பாவங்களை சுமந்து கொண்டே சாக வேண்டுமா? 

ஹஜ்ஜின் நோக்கம் பாவம் அழிக்கப்படுவது தான் என்றால் இதில் இறை நீதி எங்கே இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

உண்மையான ஹஜ்ஜி நோக்கம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், ஹாஜரா அம்மையாரை போலும் தன்னையே இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிப்பது முதல் நோக்கம். 

ஹரம் எனும் புனிதத் தளத்தில் அவனைத் தேடி அலைந்து, அவனை அடைந்து கொள்வது இரண்டாவது நோக்கம். 

பாவங்கள் அழிக்கப்படுவது, நன்மைகள் அதிகமாகக் கிடைப்பது போன்றவை யாவும் இரண்டாம் தரமான வெகுமதிகள்தாம்.

அன்று முதல் இன்று வரை இஸ்லாம் மார்க்கத்தின் பல கருத்துகளின் உண்மையான நோக்கம் மழுங்கடிக்கப்பட்டு மறைந்தே கிடக்கின்றது. 

அவை நம்மிடம் இரகசியமாக ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட உண்மைகள். ஆனால் இன்று அவை அனாயசமாக விடப்பட்டு விட்டது. அப்படி ஒரு கருத்து தான் ஹஜ்ஜின் மூலம் இறைவனை அடைவது.

நூல் : The Heart of Islam

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்