ஹாஜிகளே! நாவை அடக்கம் செய்து விடுங்கள்:

சூஃபிகளின் ஹஜ் : -19
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஹாஜிகளே! 
நாவை அடக்கம் செய்து விடுங்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

இறைநேசர் துந்நூன் மிஸ்ரி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள்: 

நான் ஒரு முறை ஹஜ்ஜுக்கு செல்லும்போது ஒரு காட்டு வழியே பயணித்துக் கொண்டிருந்தேன். 

அப்பொழுது சந்திரனைப் போன்று  அழகான ஒர் இளைஞரை சந்தித்தேன். 

அவருக்கு அல்லாஹ்வின்  மீதுள்ள அன்பு , அவருடைய உடல் முழுவதும் பரவி இருந்ததால் அவர் துடிப்போடு இருந்ததைக் கண்டேன். 

அவரும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டிருந்தார். 

நான் அவரை என்னுடன் அழைத்துக் கொண்டேன். 

அவரிடம் ஏதேனும் பேச வேண்டுமே என்பதற்காக "இந்த ஹஜ்ஜுடைய பயணம் மிக நீண்டதாக இருக்கிறது!" என்றேன். 

அதற்கு பதிலளிக்கும் முறையில் இம்ரவுல் கைஸுடைய ஒரு கவிதையை கூறினார்.  

இறையன்பு இல்லாதவர்களுக்கும்,
சோம்பேறிகளுக்கும்  
இந்தப் பயணம் 
மிக நீண்டதாகத் தெரியும். 

ஆனால் 
அல்லாஹ்வின் அன்பால் 
நிறைந்தவர்களுக்கு 
இது தூரமாகத் தெரியாது.

நூல் : இஹ்யா உலூமிதீன், துர்ருல் மன்சூர் 

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருக்கும் போது தேவையின்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். 

அதைப்போல்  எவரேனும் ஒருவரிடம் பேச வேண்டுமே என்பதற்காக எதையும் பேசக்கூடாது. அப்படி பேசும்போது நமது பலவீனம், நமது அறியாமை ஆகியவற்றை எதிராளிகள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். 

எனவே எவரிடமும் தேவையின்றி பேசுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

அந்த இளைஞர் சொன்னது போல் அல்லாஹுவின் மீது பேரன்பு கொண்டு ஹஜ்ஜுடைய அமலை மன நிறைவாக செய்ய வேண்டும்.

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் -  வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள். 

https://bmkmanbayee.blogspot.com/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்