உண்மையாக அழுவது யார் ?ஒப்புக்காக அழுவது யார்?

சூஃபிகளின் ஹஜ் : - 18
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

உண்மையாக யார் அழுவது? 
ஒப்புக்காக யார் அழுவது? 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

இறைநேசர் ஷைஹு அபூ பக்ர் சித்தீக் ஷிப்லீ  (ரஹ்) அவர்கள் தாம் செய்த ஒரு ஹஜ்ஜில் அரஃபா பெருவெளிக்கு சென்றதிலிருந்து  பேசாமல் மௌனமாக இருந்தார்கள். 

அங்கிருந்து மினாவுக்கு புறப்பட்டு சென்று ஹரம் எல்லையைக் காட்டும் இரு அடையாளங்களைக் கடந்துச் செல்லும் போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. 

அப்பொழுது அவர்கள் ஒரு கவிதை பாடினார்கள்:-

இறைவா! 
எனது இதயத்தில் 
உன் மீதான அன்பை 
நிரப்பியவனாக  
நடந்துச் செல்கிறேன். 

அதனால் 
எனது இதயத்தில் 
உன்னைத் தவிர 
வேறு யாருக்கும் இடமில்லை.  

உனது தரிசனம்  
கிடைக்கும் வரை 
வேறு யாரையும் 
பார்க்காமல் இருப்பதற்காக 
எனது கண்களை 
மூடிக்கொள்ள விரும்புகிறேன். 

நண்பர்களில் சிலர் 
ஒருவரிடமே நட்பு வைத்திருக்கின்றனர். 
சிலர் பலருடன் நட்பை கொண்டிருக்கின்றனர். 

ஆனால் 
கண்களிலிருந்து 
கண்ணீர் வடிந்து வதனங்களில் 
ஓடும் போதுதான் 
யார் உண்மையில் அழுகிறார், 
யார் ஒப்புக்காக அழுகிறார் 
என்பது புலனாகிவிடுகிறது.

இறைவா!
உன் நினைவில் 
நான் தொடர்ந்து இருந்ததால் என்னையும் அறியாமல் 
என் இதயமும், உடலும் அழுகிறது!

நூல் : மின்ஹாஜுஸ் ஸாலிஹீன்

ஹஜ் செய்கிறவர்கள் 
உம்ரா செய்கிறவர்கள் அந்தந்த அமல்களை செய்து முடித்த பிறகு இது போன்ற ஒரு மனநிலையை அடைய வேண்டும். அதுவே ஆன்மீகத்தின் உச்சநிலையாக கருதப்படுகிறது.

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் -  வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள். 

https://bmkmanbayee.blogspot.com/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்