தலைமை காஜி அவர்களின் பிறப்பும் படிப்பும் :

தலைமை காஜி 
அவர்களின் பிறப்பும் படிப்பும் :
=============================

தலைமை காஞ்சி அவர்களின் 
இன்னும் சில முன்னோர்கள் :
==========================

ஷம்சுல் உலாமா, காஜி, உபைதுல்லாஹ் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் 1880 - 1927  ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முதல் காஜி ஆவார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் இருக்கின்றது.

காஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 1928 - 1978 வரை சுமார் 50 ஆண்டுகாலம் ஹாஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத் தளமும் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வாலாஜா மஸ்ஜிதில் உள்ளது. 

காஜி ஸைய்யது ஷா முஹம்மது (1978 - 1981 ) அவர்கள் காஜியாக இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது அங்கேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்கள் அடக்கத்தளம் ஜன்னத்துல் முஅல்லாஹ்வில் அமைய பெற்றுள்ளது.

காஜி முஹம்மது அஜீஸுத்தீன் அவர்கள் 1982 - 1986 வரை காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் சிட்டி சென்டர் அருகில் உள்ள தஸ்தகீர் ஸாஹிப் தர்கா அடக்கத்தளத்தில் உள்ளது.

இன்றுள்ள டாக்டர், காஜி, முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்கள் 1986 முதல் இன்று வரை காஜியாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். 

அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நோய்நொடி இல்லா வாழ்வையும், உடல் வலிமையையும் வழங்குவானாக! ஆமீன்!!

பிறப்பும் கல்வியும் :
=====================

காஜி முஹம்மத் அஜீசுத்தீன் - உம்முல் ஹைர் தம்பதியருக்கு 12/6/1942 - 27/5/1361 அன்று ஹைதராபாத்தில் நமது தலைமை காஜி அவர்கள் பிறந்தார்கள். 

உலகப் புகழ்பெற்ற ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி ஜென்ரல் (B.Sc. General) 1962 ஆம் ஆன்று படித்து முடித்தார்கள். 

1973 ஆம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் சென்னையில் அஃப்ஸலுல் உலமா இளம்கலை  கல்வியை கற்றுத் தேரினார்கள்.

1978 இல் "அல் இஜாசத்துல் ஆலியா ஃபீ உஸூலுத்தீன் (ஸஃப்வதுத் தஃப்ஸீர்" என்ற உயர் கல்வியை 
ஆயிரம் ஆண்டு பழமையான உலகப்புகழ் பெற்ற, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான எகிஃப்து 'ஜாமிஉல் அஸ்ஹர்' பல்கலைக்கழகத்தில் 
பயின்றார்கள்.  இங்கு நான்கு வருடங்கள் எகிப்தில் தங்கி இருந்து படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தாயகம் திரும்பி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் M.A., Arabic படித்து 1984 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்கள். 

ஹள்ரத் அவர்கள்  அரபி, உருது, ஃபார்சி, தெலுகு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உரையாடும் திறன் பெற்றவர்வர்கள் ஆவர்.

مولانا محمد غوس شرف الملك ومؤلفاتة العربية

Moulana Mohammed Ghouse Sharf Ul Mulk Wa Mu'allafathul Arabiyah - M.Phil - என்ற தலைப்பில் இளம் முனைவருக்கான பட்டயப் படிப்பை மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1988 ஆம் ஆண்டு படித்து முடித்தார்கள். 

இவர்கள் இந்தப் படிப்பை படிக்கும் பொழுது காஜியாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 
العلماء الكبار من أسرة القاضي بدر الدولة ومساهمتهم للعلوم العربية والإسلامية

Al Ulama Al Kibar Min Usrati Al Qazi Badrud Dawla Wa Musahimatihim Lil Uloom Al Arabiyyah Wal Islamiyyah  எனும் 
தலைப்பில் படித்து 2000 ஆமாவது ஆண்டு பிஎச்.டி (Ph.D) எனும் முனைவர் பட்டம் பெற்றார்கள்.

இவரின் முனைவர் பட்டத்துக்குரிய வழிகாட்டியான சென்னை பல்கலைக்கழக அரபுத் துறை தலைவரும் பலநூறு ஆலிம்களின் வழிகாட்டியும் சிறந்த கல்வியாளருமான மறைந்த நிஜார் அஹ்மது (ரஹ்) அவர்கள் இவரது ஆராய்ச்சி கட்டுரையில் ஒரு புள்ளி ஒரு கமா கூட மாற்றமோ திருத்தமோ செய்யாமல் அப்படியே ஒப்புக்கொண்டார்கள் என்று இப்பொழுதும் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆலிம்களிடையே பேசு பொருளாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனது இளம் முனைவர் M.Phil ளுக்கான exam - பரீட்சை கேட்பதற்கு நிஜார் அஹ்மது (ரஹ்) அவர்கள் வந்திருந்தார்கள். 

லால்பேட்டை அமானி ஹள்ரத் அவர்களின் மருமகனும், பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் நிறுவனருமான ஹள்ரத் அவர்களின் மகன் வலியுல்லாஹ் ஹள்ரத் அவர்கள் வஃபாத்தான அன்று அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு நானும் இன்றைய மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவீ, ஹாஃபிழ், அன்வர் பாஷா ஹள்ரத் அவர்களும் நிஜார் அஹ்மது (ரஹ்) அவர்கள் இல்லம் சென்று வெகு நேரம் பல்வேறு செய்திகளை பேசிவிட்டு வந்தோம். அது ஒரு அழகான நாள்!

.
.
.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்