விருதுகள் கௌரவம் பெரும் விழா :
================================
1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக ராஜாஜி அவர்கள் இருந்தபோது காஜி பதவிக்கு அரசு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து ஐந்து நபர்கள் விருப்ப மனு அளித்திருந்தார்கள்.
அவர்களுக்கான நேர்காணல் தேதி அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் நேர்காணல் - இண்டர்வியூவிற்கு நான்கு பேர் குறித்த நேரத்தில் ஆஜராகி இருந்தார்கள்.
முதல் அமைச்சர் ராஜாஜி அவர்கள் வந்திருந்த ஆலிம்களிடம் பேசுவதற்காக தயாரான போது, ஐந்தாவது நபர் ஹபீபுல்லாஹ் என்பவர் வராததை அறிந்து "அவர் ஏன் வரவில்லை?" என்று தம் உதவியாளரிடம் கேட்டார்.
"அய்யா! இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தம்மால் இண்டர்வியூவிற்கு வர இயலவில்லை" என ஹபிபுல்லாஹ் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார் .
உடனே ராஜாஜி அவர்கள் "ஷரிஅத் சட்டப்படி தீர்ப்பு வழங்கும் காஜி பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்; ஹபீபுல்லாஹ் சாஹிபை தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக தேர்வு செய்து அறிவித்து விடுங்கள்" என முதல்வர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உத்தரவுப் பிறப்பித்தார்கள்.
அவ்வளவு பேணுதலும், மார்க்க பற்றுதலும் உடைய மௌலானா, ஹபீபுல்லாஹ் (ரஹ்) அவர்களின் சகோதரி மகன் தான் இன்றைய தமிழ்நாடு தலைமை காஜி அவர்கள்.
இஸ்லாமியக் கொள்கையில் உறுதியும், தக்வா - இறையச்சமும் கொண்டவர்தான் இப்போதிருக்கும் மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசு தலைமை காஜி, அல்லாமா, முஃப்தி, டாக்டர், ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ அவர்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை வாழ்நாள் சாதனைச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தது. அது போற்றுதலுக்கு உரியது!
இப்பொழுது இஸ்லாமிய மூலாதார நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டு வரும் முன்னோடி நிறுவனமான 'ரஹமத் பதிப்பகம்' தமிழ்நாடு தலைமை காஜி அவர்களுக்கு 'புகாரி விருது' எனும் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கிறது.
இந்த நிறுவனம் மொழிபெயர்த்த முதல் நூலான புகாரி பெயராலும், ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் இதயங்களில் இருக்கும் திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக உள்ள புகாரி ஷரீபின் பெயராலும், இன்றைய தமிழகத்தின் ஆக மூத்த ஆலிமாக திகழும் காஜி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது.
அல்ஹம்துலில்லாஹ்!
விருதுகள்
கௌரவம் பெறும் விழாவிற்கு வாருங்கள் !
நீங்களும் கௌரவம் பெறுங்கள்!!
அனைவரும் வாருங்கள்!
அறிவமுதம் பெறுங்கள்!!
واجعلنا مع الابرار
இறைவா!
எங்களை நல்லவர்களுடன்
சேர்த்து வைப்பாயாக !
Comments
Post a Comment