பெரம்பலூர் அலவி மௌலானா அவர்கள் நபிகள் நாயகத்தின் சந்ததியா?
=================================
الْعَلَوِيَّةُ هُمُ الْمَنْسُوبُونَ لِعَلِي وَإِنْ لَمْ يَكُونُوا مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهُمَا
التَّحْفَةُ ج : ٧ ص : ٦٦ فَضْلُ فِي أَحْكَامِ لَفْظِيَّةٍ لِلْمُوْضَى بِهِ)
فَجَمِيعُ أَوْلَادِ عَلِي يُقَالُ لَهُمْ مِنْ آلِهِ لِأَنَّهُمْ مِنْ بَنِي هَاشِمٍ
حَاشِيَةُ الْقَلْيُونِي ج: ٣ ص: ١٦٩ بَابٌ فِي أَحْكَامِ الْوَصِيَّةِ اللُّفْظِيَّةِ)
பொருள் :
==========
அலவிகள் என்போர் அலீ (ரலி) அவர்களின் சந்ததிகள் ஆவர்; ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு பிறக்காதவர்களும் அலவிகலே!
அலீ (ரலி) அவர்களின் அனைத்து பிள்ளைகளும் பனூ ஹாஷிம் சந்ததியில் வந்து விடுவதால், அவர்கள் யாவரும் நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளாகவே கருதப்படுவார்கள்.
நூல் : அத்துஹ்ஃபா ,
அல் கல்யூனீ ஹாஷியா
விளக்கம் :
==========
அலவி எனும் சொல்லுக்கு அலீ (ரலி) அவர்களின் ஆன்மக்கள் என்றும், ஹுசைன் (ரலி) அவர்களின் வழித் தோன்றல்கள் அனைவரும் என்றும் பொருள்.
ஹள்ரத் அலீ (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகளையும், அலீ (ரலி) அவர்களுடைய மற்ற மனைவிமார்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் அலவிகள் என்று சொல்லப்படும் .
அலீ (ரலி) அவர்களின் பிள்ளைகள் அனைவரும் பனூ ஹாஷிம் என்னும் சந்ததியினருக்குள் வந்து விடுவதால் இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் என்று அழைக்கப்படுவர்.
அலீ (ரலி) அவர்களின்
மனைவியர் விபரம்:
======================
ஒரே நேரத்தில் இஸ்லாமிய ஆண்கள் நான்கு மனைவியரோடு வாழ இஸ்லாம் மார்க்கம் அனுமதித்து இருக்கின்றது.
ஒரு மனைவி இறந்த பிறகு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து மனைவியாக ஆக்கிக் கொள்ளலாம்.
விவாகரத்து செய்த பிறகு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து மனைவியாக ஆக்கிக் கொள்ளலாம். ( இன்று 99.9 % முஸ்லிம்களில் எவரும் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்து வாழ வில்லை.)
அலீ (ரலி) அவர்கள் ஒன்பது பெண்களை திருமணம் செய்து இருந்ததாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.
ஒருவர் மரணித்த பிறகோ அல்லது விவாகரத்து செய்த பிறகோ தான் மற்ற பெண்களை அலீ (ரலி) அவர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள் என்பதும் உண்மையே!
ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிரோடு இருக்கும் வரை வேறு எந்த பெண்ணையும் அலீ (ரலி) அவர்கள் திருமணம் செய்யவில்லை என்பதும் வரலாறு!
1. ஃபாத்திமா பின்த் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் 5: ஹஸன், ஹுஸைன், முஹ்ஸின், ஸைனப், உம்மு குல்சூம்.
2. உம்முல் பனீன் பின்த் குஸாம். பிள்ளைகள் 4: அப்பாஸ், அப்துல்லாஹ், உஸ்மான், ஜஃபர்,
3. லைலா பின்த் மஸ்வூத். பிள்ளைகள் 2: அபூபக்கர், உபைதுல்லாஹ்.
4. அஸ்மா பின்த் உமைஸ் . பிள்ளைகள் 2: யஹ்யா, (சிரிய) முஹம்மத் அல்லது அவ்ன்
5. உம்மு ஹபீபா பின்த் ரபீஆ. பிள்ளைகள் 2: உமர், ருகையா.
6. உமாமா பின்த் அல்ஆஸ் . பிள்ளைகள் 1: (நடு) முஹம்மத்.
7. ஹனஃபியா கவ்லா பின்த் ஜஃபர். பிள்ளைகள் 1: (பெரிய) முஹம்மத்.
8. உம்மு ஸஈத் பின்து உருவா. பிள்ளைகள் 2: உம்முல் ஹசன், ரமலா.
9. மிஹ்யா பின்த் இம்ரவுல் கைஸ். பிள்ளைகள் 1: ஜாரியா
14 ஆண் மக்கள் 17 பெண் மக்கள் பிறந்தனர் எனக் கூறப்படுகிறது.
விஷயத்திற்கு வருகின்றேன் :
==========================
கேரளாவில் பிறந்து வேலூர் பாகியாத், சென்னை ஜமாலியா போன்ற கல்லூரிகளில் பயின்று, பெரிய வடகரை அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பெரம்பலூரில் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் மதரஸாவையும், ஸ்கூலையும் தொடங்கிய பெரம்பலூர் மௌலானா அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளில் ஒருவர் ஆவார் என மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகின்றது.
நமக்கு அருகில், நாம் வாழ்ந்த காலத்தில், நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளில் ஒருவர் நம்மோடு வாழ்ந்திருக்கிறார் என்பதை எண்ணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கின்றது.
அலவி மௌலானா அவர்களுக்காக துஆ செய்வோம். அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்து உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கச் செய்வானாக! ஆமீன்!!
Comments
Post a Comment