அது மகன் ஷத்தாத் கட்டிய சொர்க்கம்

அது மகன் ஷத்தாத் 
கட்டிய சொர்க்கம். : - 3
======================

தொடர்ச்சி......

இப்படியும் ஒரு செய்தி காணப்படுகின்றது;
======================

அல்லாஹ் "இஜ்ராயீலே! நீங்கள் எப்போதாவது எவர் மீதாவது இரக்கம் கொண்டு இருக்கின்றீரா ?" என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்,
"ஆம்! ஒரு முறை கடலில் கப்பல் ஒன்று  கவிழ்ந்துப் போனது; அதில் இருந்த அத்தனை பேரின் உயிரையும் நான் தான் கைப்பற்றினேன்.

உடைந்தக் கப்பலில் ஒரு கர்ப்பிணிப் பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து இருந்தாள். அதை சிறிய மரத்துண்டில் வைத்து நீந்தி கொண்டிருந்தாள். 

அச்சமயம் உனது உத்தரவுக்கிணங்க ஒரு மீனை கடிக்கச் செய்து அதன் மூலம் அந்தத் தாயின் உயிரையும் என்னையே நீ கைப்பற்றச் செய்தாய்! அது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது" எனக் கூறினார்.

"இதைப் போன்று வேறு ஏதேனும் சம்பவங்களை நீ சந்தித்து இருக்கிறாயா?" என அல்லாஹ் மீண்டும் கேட்டான். 

அதற்கு இஜ்ராயீல் (அலை) அவர்கள், "இறைவா! ஷத்தாத் 300 வருடங்களாக, பார்த்துப் பார்த்து சொர்க்கத்தைக் காட்டினான்; அவன் உள்ளே நுழைவதற்கு முன்பு அவன் உயிரை கைப்பற்றச் சொல்லி விட்டாய்; அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ், "இஜ்ராயீலே! அன்று தாயில்லாமல் கடலில் தத்தளித்த அந்த ஆண் குழந்தைதான் இந்த ஷத்தாது" என்று கூறினான். அதனை கேட்டதும் இஜ்ராயீல் (அலை) அவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.

இதை ஒரு தகவலாக உங்களுக்கு நான் சொல்லுகிறேன். இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல! ஆனாலும் ஆத் மகன் ஷத்தாத் சொர்க்கத்தைக் கட்டியது உண்மை! 

அந்த சொர்க்கத்தின் வர்ணனையும், கட்டிட அமைப்பும் எப்படிப்பட்டது என்பதில் தான் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஏனென்றால் அதை கட்டியவர்கள் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை அல்லவா? இப்படித்தான் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

.
.
.
. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள காணொளிகளையும் கட்டுரைகளையும் காண்க!
.
https://youtu.be/9NlLSE7hanU?si=nf_SiTT6wFZnpk0G

https://youtube.com/shorts/fk7nCQZXUG0?si=pIKQoV0QTR1ZE9Xc

https://youtube.com/shorts/cX1eCVebKcs?si=Nhs0MiZwrJbUbBNr

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்