நூல் அறிமுக கூட்டம்
நூல் அறிமுக கூட்டம் :
=======================
24 \11 \ 2024 அன்று சமூகநீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
தலைமை உரை ஆற்றிய ஜெயபால் இரத்தினம் ஐயா அவர்கள் வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூலை சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள்.
வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூலை ஐயா அகவி அவர்கள் திறனாய்வுரை செய்தார்கள்.
அவர்களின் உரை கேட்பதற்கு இனிமையாகவும் மிக சிறப்பாகவும் இருந்தது. அன்றைய தினம் 65 நூல்கள் விற்பனையானது. அங்கிருந்த சகோதரர் ஒருவர், "வந்திருந்தவர்களின் எண்ணிக்கை விட நூலின் விற்பனை எண்ணிக்கை அதிகம்" என கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களில் பா. வசந்தன் அவர்களோடு முதல் தொடர்பு ஆறு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது.
எந்த நோக்கத்தை முன்னிறுத்தி அவரை தொடர்பு கொண்டேனோ அந்த நோக்கம் நூலாக உரு பெற்று அவரின் வரவேற்புரையோடு முடிவுக்கு வந்தது.
எங்களது பெரிய வடகரை கிராமத்தில் இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் மீலாதுந் நபி விழாவிலும் அன்றைய தினம் சிறப்புரை ஆற்றிய அரும்பாவூர் தாஹிர்பாட்ஷா அவர்களுக்கும் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும், பிரார்த்தனையையும் உரித்தாக்குகிறேன்.
மேலும் விபரங்களுக்கு..
https://trichyfastnews.com/?p=23508
Comments
Post a Comment