ஐந்தாவது தலைமுறையாக...
=================================
=================================
தமிழ்நாடு அரசு தலைமை காஜி,
=================================
அல்லாமா, ஸலாஹுத்தீன்
=================================
முஹம்மது அய்யூப் அவர்கள்:
=================================
அரசு தலைமை காஜி அவர்கள் "ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் வமிசா வழியில் வந்தவர்கள்" என்று
சொல்லப்படுகிறது.
இதை உறுதி செய்துகொள்ள தலைமை காஜி அவர்களிடத்திலேயே கேட்டபோது, "என் முன்னோர்கள் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள்; ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை" என்று கூறினார்கள்.
உள்ளது உள்ளபடி உண்மையை உரைத்த தலைமை காஜி அவர்கள் சித்திக் - உண்மையாளர் பரம்பரையில் உள்ளவராகத் தான் இருப்பார் எனத் தோன்றியது.
1892 இல் நவாப் வாலாஜா முஹம்மது அலீ அவர்களின் காலத்தில் முதல் காஜியாக பத்ருத்தவ்லா (ரஹ்) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு இன்று கடற்கரைச் சாலையில் அமைத்துள்ள பிரசிடென்சி கல்லூரி வளாகத்தில்தான் அலுவலகம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள திவான் சாஹிப் தோட்டம் மானியமாக இந்தக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் தான் இன்று உள்ள காஜி சாஹிப் அலுவலகத்தில் மதரஸா முஹம்மதிய்யா என்ற மார்க்க கல்வி கூடமும் நிறுவப்பட்டது.
காஜி பத்ருத்தவ்லா அவர்களின் கொள்ளுப் பேரனுடைய பேரன்தான் நமது தலைமை காஜி ஸாகிப் ஆவார்கள்.
அதாவது ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவர் தான் நமது தலைமை காஜி அவர்கள். கடந்த ஐந்து தலைமுறை காஜிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் ஒரே தலைமுறையில் தோன்றியவர்கள் அல்ல!
நமது தலைமை காஜி ஸாஹிப் அவர்களின் சிரிய தந்தை முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 104 வயது வரை வாழ்ந்து 14/ 09/ 1978 இல் காலமானார்கள்.
சென்னை புதுக்கல்லூரியின் அரபுத் துறை விழா ஒன்றில் எகிப்து அல் அஜ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவர் அரபு மொழியில் உரையாற்றினார்.
அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நமது தலைமை காஜி ஸாஹிப் அவர்களை விழா குழுவினரில் ஒருவர் அழைத்து மொழிபெயர்க்கும் படி கூறினார்.
நமது தலைமை காஜி ஸாஹிப் அவர்கள் மிகச்சரியாக, தெளிவாக, உணர்ச்சிகளோடு மொழிபெயர்த்து கூறினார்கள். அல் அஜ்ஹர் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அல் அஜ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நமது தலைமை காஜி அவர்களை எகிப்தில் வந்து படிக்க அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்றுச் சென்று படித்து டாக்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார்கள். பின்னர் நியூ காலேஜில் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள். நான் அவர்களிடம் நியூ காலேஜில் special - சிறப்பு வகுப்புகளில் பயின்றுள்ளேன்.
"அல்லாஹ்
அவர்களுக்கு
ஆரோக்கியத்தையும்,
நீண்ட ஆயுளையும்,
ஆகச்சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்குவானாக!" என்று
நானும் பிரார்த்திக்கின்றேன்; நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.!
Comments
Post a Comment