தலைமை காஜி அவர்களின் எளிமை, தூய்மை, வாய்மை :
தலைமை காஜி அவர்களின்
எளிமை, தூய்மை, வாய்மை :
============================
தலைமை காஜி அவர்கள் தமது அலுவலகத்தில் வெறும் கோரைப்பாயில் அமர்ந்துதான் தம் பணிகளை மேற்கொள்வார்கள்.
பழங்காலத்தில் கணக்குப் பிள்ளைகள் வைத்திருப்பது போன்று மரப்பலகையினால் ஆன சிறியதொரு டேபிள் போட்டு அமர்ந்திருப்பார்கள்.
காலை எட்டு மணிக்குத் தமது பணியைத் தொடங்கி மஃரிப் வரை அலுவலகத்தில் அமர்ந்திருந்து பலபாகங்களிலிருந்து வரும் அனைவருக்கும் கேட்கும் சான்றிதழ்களை வழங்குவார்கள். அதற்காக ஒரு பைசாகூட கட்டணம் பெற மாட்டார்கள்.
தலைமை காஜி அவர்களுக்கு உதவியாளரோ, பியூனோ, டைப்மிஷினோ தொலைபேசியோ எதுவும் கிடையாது.
ஆடம்பரம் இல்லாமல் மிகப்பணிவுடனும், எளிமையாகவும், புன் சிரிப்புத் தவழ அனைவரையும் வரவேற்று அவர்களின் குறைகளை அறிந்து நிறைவு செய்துத் தருவார்கள்.
எவரையும் கடிந்து கொள்ளாமல் பணியாற்றுவதை காணும்போது நாம் படித்த கலீஃபாக்களின் வாழ்வுதான் நம் கண் முன்னே வந்து செல்லும்.
பார்க்கவும் பழகவும் அவர்கள் எளிமையாக இருந்தாலும் கொள்கையில் உறுதியானவர். இவர்களைப் போன்று கொள்கையில் உறுதியான வேறு எவரையும் நாம் பார்க்க இயலாது. பார்த்திருக்கவும் இயலாது.
இவர்கள் கலந்து கொள்ளும் திருமணங்கள், மீலாது விழாக்கள் ஆகியவற்றுக்கு தம்மிடமுள்ள இரு சக்கர வாகனத்தில்தான் வருவார்கள். அதற்காக கட்டணம் எதையும் பெறமாட்டார்கள்.
நிகழ்ச்சி நடத்துனர்கள் எதுவும் நன்கொடை கொடுத்தாலும் கண்டிப்பாக மறுத்துவிடுவார்கள்.
எளிமையின் உருவமான தலைமை காஜி அவர்களுக்கு இன்று மாலை 'புகாரி விருது' வழங்கும் பொருத்தமான நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment