தலைமை காஜி அவர்களின் குறிப்பிட்ட சில முன்னோர்கள் :

தலைமை காஜி அவர்களின் 
குறிப்பிட்ட சில முன்னோர்கள் :
==============================

நமது தலைமை காஜி அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்) அவர்கள் ஹைதராபாத் நிஜாம்களின் தலைமை செயலக அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில்  பணியாற்றினார்கள்.

நமது தலைமை காஜி அவர்களின் குடும்பத்தினரை அல் நாயித் /  நவாயித் என அழைக்கின்றனர். 

மதீனாவை ஆட்சி செய்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்ற ஆட்சியாளரின் காலத்தில் அவனுடைய கொடுமைகளை தாளாமல் ஒரு கூட்டம் பஸரா (எகிப்து) நகருக்கு குடி பெயர்ந்தது. பின்னர் அவர்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் வந்து குடி ஏறினார்கள். 

நாயித் எனும் குடும்பத்தினர் இன்றும்  அரபு நாடு மற்றும் ஈரான், ஈராக் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நவாயித் எனும் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய தோழர்களின் வம்சாவளியினர் என்பது உண்மை. 

والنَّائِطي: نسبةً لسُلالةٍ من القبائل العربيَّة، هاجرت من المدينة المنوَّرة خوفًا من الحجَّاج بن يوسف الثَّقفي إلى البصرة، ثم إلى السَّاحل الجنوبي للهند، وسكنت به، ومارست التِّجارة والملاحة، ولها جهدٌ عظيمٌ في الدَّعوة، والإرشاد، والتَّأليف، والتَّحقيق، وقد سُمِّيت بـ ((النَّوَائِتِ)) أو ((النَّوَائِطِ)).

இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தான் நமது தலைமை காஜி என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் தங்களை அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. 'சையது வம்சம்' என்றும் சொல்லிக் கொள்வதில்லை.

திவான் முஹம்மது கவுஸ் ஷரஃபுல் முல்க் (ரஹ்) கர்நாடக நவாப்களின்  நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் அமைந்திருக்கின்றது.

ஹள்ரத் காஜி, பத்ருத்தவ்லா ஸிப்கதுல்லாஹ் மதராஸீ (ரஹ்) அவர்கள் கர்நாடக நவாப்களின் காஜியாகவும் பின்னர் சென்னை ஆங்கிலேய அரசினரால் நியமிக்கப்பட்ட காஜியாகவும் இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் பல நூல்களை ஏற்றி இருக்கிறார்கள்.

மேற்கண்ட இருவர் குறித்து மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் வெப்சைட்டை காணுங்கள்.

https://search.app?link=https%3A%2F%2Fwww.alukah.net%2Fculture%2F0%2F128821%2F%25D8%25AA%25D8%25AD%25D8%25A8%25D9%258A%25D8%25B1-%25D8%25A7%25D9%2584%25D9%2583%25D8%25B1%25D8%25A7%25D8%25B3-%25D9%2581%25D9%258A-%25D8%25AA%25D8%25B1%25D8%25AC%25D9%2585%25D8%25A9-%25D8%25B5%25D8%25A8%25D8%25BA%25D8%25A9-%25D8%25A7%25D9%2584%25D9%2584%25D9%2587-%25D8%25A7%25D9%2584%25D9%2585%25D8%25AF%25D8%25B1%25D8%25A7%25D8%25B3-1211-%25D9%2587%25D9%2580-1280-%25D9%2587%25D9%2580%2F&utm_campaign=aga&utm_source=agsadl1%2Csh%2Fx%2Fgs%2Fm2%2F4

https://search.app?link=https%3A%2F%2Ftarajm.com%2Fpeople%2F96168&utm_campaign=aga&utm_source=agsadl1%2Csh%2Fx%2Fgs%2Fm2%2F4

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்